பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

187 சுரதா ஒர் ஒப்பாய்வு ليبي இராகம்: வாசஸ்பதி தாளம்: ஆத் முதல் சேரன் செங்குட்டுவன் - சிலப்பதிகாரம் செய்த இளங்கோ அடிகளின் அண்ணன், மன்னன்! இடை வீரன், வடநாட்டை வென்ற தீரன் - இமயத்தில் வில்எழுதி, வெற்றிச் சொல்எழுதி வந்தவன் (சேரன்) 49/sq. சங்க இலக்கியம்போல் மிகவும் சிறந்தவன்; சூரியன் போலே யாருக்கும் தெரிந்தவன், சங்கீதம் ஒவியம் யாவும் அறிந்தவன் சோழன் காவிரிபோலே நன்மை புரிந்தவன் (சேரன்) பாரி(னி)ல் தமிழன் பெருமையைப் பறைசாற்றி பெரியாரை, கவிஞரை, அறிஞரைப் போற்றி பேரும் புகழும், எட்டுத் திசையிலும் தாண்ட பாண்டியன்போல் பொன்முடி சூடி ஆண்ட (சேரன்) இப்பாடல் திரைப்பட நகைச்சுவை நடிகர் திரு.டி.எஸ். துரைராஜ். அவர்களின் புதுமனைப் புகுவிழாவின் போது(10.9.1953) கலைமாமணி திரு. தில்ருபா சண்முகம் அவர்கள் கேட்டுக்கொண்டதற் கிணங்க அவ்விழாவிலேயே உவமைக்கவிஞர் சுரதா அவர்களால் எழுதிக் கொடுக்கப் பெற்றது. இப்பாடலுக்குக் கலைமாமணி திரு.தில் ருபா சண்முகம் அவர்கள் இசையமைத்துப் பல மேடைகளில் பாடியுள்ளார். இப்பாடல் சுரதா அவர்களின் கையெழுத்திலேயே கலைமாமணி தில்ருபா சண்முகம் அவர்களிடமிருந்து பெறப்பட்டது.