உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுருளிமலை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 மு. கருணாநிதி காளவாய்க்கரைப் பக்கமாகப் போய்க் கொண்டிருந்தான். நானும் மெதுவாக அவனை விடாது தொடர்ந்தேன்.' 64 அங்கே ஓர் அய்யனார் கோயில்! மிகவும் பிரசித்தி பெற்ற கோயில். சபரி மலை அய்யப்ப சாமியின் சித்தப்பா பிள்ளையாம் அந்த ஊரிலே உள்ள அய்யனார் சாமி! அவருக்குப் பிரார்த்தனை செய்துகொண்டு பலபேர் குதிரைகள் செய்து கோயில் வாசலிலே நிறுத்தியிருந்தனர். குதிரைப் பந்தயத்தில் மற்ற குதிரைகளை டுகிற 'ஜாக்கி' களுக்கு லஞ்சம் கொடுத்துத் தன் குதிரையை ஜெயித்ததாக அறிவிக்கச் செய்து ஒரே சமயம் பத்து லட்ச சூபாய் சம்பாதித்த பதஞ்சலிப் பிள்ளை என்ற சூதாடி யொருவர் ஊஞ்ச கல்யாணிக் குதிரை யொன்றை அந்தக் கோயில் வாசலில் யாம்மையாகச் செய்து வைத்து பிரார்த்தனையை செலுத்திக் காண்டார் அய்யனார், இரவு நேரங்களில் அந்த் மண் குதிரை ள் ஒன்றில் ஏறிக்கொண்டு ஆற்றையெல்லாம் கடப்பாராம்." ی அப்படிப்பட்ட கோயில்வாசலில உள்ள குதிரைகளில் ஒன் ஜின் காலுக்குக் கீழே கண்ணன், தன் வேலையைத் தொடங் கினான் அவன் அதைவிட்டுப் போனதும் நான் அதே இடத்தில் ஏன் ஆராய்ச்சியை நடத்தினேன். பலிபீடத்தருகே இருந்தது போன்ற பழைய பொருள்களே தான் ! அவைகளை யெடுத்து காளவாய் நெருப்பில் வீசிவிட்டு முன்போலக் குழியை மூடிவிட்டுத் திருமபினேன்." "பின்னர், மேலத் திசையில் உள்ள ஒரு பாலத்தின் கீழே தன் வேலையை நடத்தினான் கண்ணன். நான் என் வேலையை நடத்தினேன் 99 கடைசியாக, வடக்குத் திசையில் வாய்க்கால் ஓரத்தில் வானுற ஓங்கி வளர்ந்திருக்கும் இரு கிளை முளைத்த தென்னமரத் தடியில் கண்ணன் போய் அமர்ந்தான் நானும் சற்றுத் தொலை விலிருந்து கவனித்தேன். அவன் கீழே குழி தோண்டுகிறானா என்று கவனித்தேன். பேசாமல் உட்கார்ந்து சுற்று முற்றும் ஊர்த்தான் பிறகு எழுந்தான். எனக்கொன்றும் புரியவில்லை. ஊளமளவென்று தென்னை மரத்தில் ஏறினான். அடியிலேயே இரு கிளையாய்ப் பிரிந்து வளர்ந்திருக்கும் அந்த மரத்தில் ஒருகிளையில் .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/108&oldid=1695009" இலிருந்து மீள்விக்கப்பட்டது