உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுருளிமலை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10% மு.கருணாநிதி இந்த ஊர்லே எவ்வளவு நாளா இப்படிக் கஷ்டமாயிருக்கு?' என்று அடுத்தபடி யாகக் கேட்டான்." 40 கிறுமை கஷ்டமா? என்ன கஷ்டம்? யாருக்கு?' என்றேன். அதான் ஊரிலே நோய், நொடி, சாக்காடு வறுமை இப்படி யெல்லாம் இருக்கே அது எத்தனை நாளா கண்ணன். - - இருக்குன்னு கேக்கிறேன்' என்று விசாரித்தான் 'அது பல நாளாய் இருக்கு!' என்று ருக்கு!' என்று அலட்சியமாகச் சொன்னேன் நான்." நாளையிலிருந்து இந்த ஊரைப் பிடிச்ச பீடை தொலையுது! என்றான். 99 'ஏன்? நீ ஊருக்குப்போகிறாயோ?' என்றேன். அந்தக் கிண்டலை அவன் புரிந்துகொள்ளவில்லை. 'தகடு எடுக்கப் போகி றேன்; தகடு!' என்றான் கம்பீரமாக! நேரம் அதிகமாகி விட்டது. சிறிதுநேரம் தூங்கலாம் என்று விடியற்காலை கண்ணை மூடினோம் 'மறுநாள் ஊரே அமர்களகப்பட்டது. கரகமாடிக் கண்ணன் மலையாள மாந்திரீகன் புதைத்த தகட்டை எடுக்கப் போகிறான் என்ற சேதி, காட்டுத் தீ போல் பரவிட்டது. ஆயிரக் கண+கான மக்கள் அந்தச் சிறிய கிராமத்தில் கூடிவிட்டார்கள் கரக ஆட்டத் திற்கு வந்ததைவிட நாலு மடங்கு அதிகமான கூட்டம்! எல்லோ ரும் பீதியோடும் வியப்போடும் தகடு எடுக்கும் சம்பவம்பற்றி பேசிக் கொண்டார்கள். தகடு எடுக்கும்போது மலையாள தேவதை அதிக பலத்தோடு சண்டை போட்டு கண்ணன் விடும் தேவதை யை விரட்டிவிட்டால் அதே இடத்தில் கண்ணன் சாக வேண்டி யதுதான் வாயாலும் மூக்காலும ரத்தங் கொட்டிப் பிணமாகி விடுவான் ; பாவம்- என்றெல்லாம் அனுதாப உணர்ச்சியோடு குழுமினர் 'பாவம்-அழகான வாலிபன் ! இவனுக்கேன் இப்படிப் பட்ட துணிச்சல்? இவன் ஏன் மலையாள தேவதையிடம் தன் கைவரிசையைக் காட்டப்போகிறான் ?' என்று செல்லமாகக் கண்டனம் தெரிவித்துக் கூறினர் பலர் " காலையில் கண்ணன் நன்றாகக் குளித்து முழுகி, உடம்பெல் லாம் சந்தனம் பூசி, அகலமான குங்குமப் பொட்டு ஒன்றை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/110&oldid=1695011" இலிருந்து மீள்விக்கப்பட்டது