உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுருளிமலை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுருளிமலை 113 குத்துவிட்டான். கைகளில் பெட்டி படுக்கையிருந்த காரணத் தால் என்னால் உடனடியாக அதைத் தடுத்துக்கொள்ள முடிய வில்லை. கைகளில் உள்ள பொருள்களைக் கீழே வைத்துவிட்டு நான் எதிர்ப்பதற்குத் தயாராவதற்குள் மறுபடியும் ஒரு குத்து நெஞ்சிலே விழுந்தது..... இதைக்கேட்டதும் " அம்மாடி ! என் தங்கம் !" என்று பூஞ் சோலை மன முருகினாள். பொன்மணியின் நெஞ்சிலே ஈட்டிகள் பாய்ந்தது போலிருந் தது ..அறவாழியின் மார்பக்கத்தில் எவ்வளவு வேதனையிருக்கு என எண்ணி நடுக்குற்றாள். அவளையறியாது அவள் கன்னங்களில் கண்ணீர் பெருக் கெடுத்தது மோ - அறவாழி சண்டையை வர்ணிக்க ஆரம்பித்துவிட்டான் : "நெஞ்சிலே குத்துவிழுந்தது நிலை தடுமாறிவிட்டேன். இருந்தாலும் மூச்சைப் பிடித்துக்கொண்டு கண்ணனை எதிர்ப் பதற்குத் தயாரானேன். அவன் என்னோடு நேர்மையான சண்டைக்குவரவில்லை. நான் எதிர்க்கப் போகிறேன் எனக் கண் டதும் ஒரு பெரிய கருங்கல்லைக் கையிலே தூக்கிக்கொண்டு என் தலையை நோக்கி வீசுவதற்குக் குறி பார்த்தான். சுற்று முற்றும் பார்த்தேன் எனக்கு ஒரு ஆயுதமும் கிடைக்கவில்லை. அவனும் கல்லை என்மீது எறியவில்லை. குறிதவறிக்கீழே விழுந்து விட்டால் விழுந்த கல்லை நான் எடுத்துக்கொள்வேன் என்ற பயம் போலும், அவனுக்கு! கல்லோடு என்னைத் துரத்தினான். நான் ஒடுவதைத்தவிர வேறுவழியில்லை. ஒரு மரத்தடிப் பக்கம் ஓடினேன். கோயில்காளை அங்கேதான் படுத்திருந்தது. அங்கே ஒரு சுமைதாங்கியில் யாரோ ஒரு ஆள் படுத்திருப்பது தெரிந்தது. அதைக் கண்ணனும் பார்த்துவிட்டான். தீடீரெனக் கல்லை வெகு 5 வேகமாக என்னை நோக்கி வீசீனான். நான் குறியினின்று தப் பினேன். ஆனால் அந்தக் கல், காளையின்மீது விழுந்தது. காளை, ஒரு பெரிய சப்தத்துடன் துள்ளியெழுந்தது. கண்ணன் பறந்து விட்டான் அதை விட்டு. அவ்வளவுதான் எனக்குத்தெரியும். காளை என்மீது பாய்ந்தது. ஓடினேன். ஓடினேன். தெருவிலே உருண்டேன். சுமைதாங்கியில் படுத்திருந்த ஆள் ஏதோ சப்தம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/115&oldid=1695016" இலிருந்து மீள்விக்கப்பட்டது