உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுருளிமலை.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 மு கருணாநிதி ஆமாம்; பேச்சை நிறுத்திட்டு-சண்டையை ஆரம்பிங்கோ; சண்டை நடக்கட்டும்- உலகம் அழியட்டும்!" என்று கொட்டியவாறு கத்தினான் சிரஞ்சீவி கை அவன் தலையில் ஓர் அறை கொடுத்து விட்டுப் பஞ்சாயத்தார், சிங்காரத்தைப் போய்ப் பிடித்து நிறுத்தினார் சிங்காரம், பஞ்சா யத்தாருக்குப் பணிந்து நின்ற சமயத்தில், கண்ணன் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து சிங்காரத்தின் நெற்றியில் பலமாக ஒரு குத்து விட்டான் அதற்குமேல் சிங்காரம் பஞ்சாயத்தாரின் பிடிக்குள் இருக்க முடியவில்லை கையிலிருந்த கம்பைக் கீழே போட்டுவிட்டு கண்ணன்மீது பாய்ந்தான். இருவரிடையே சரமாரியாகக் குத்துக்கள் விழுந்தன. தெருவினரும் பஞ்சாயத் தாரும் குறுக்கிட்டு இருவரையும் திமிர விடாமல் அமுக்கிக் பிடித்துக் கொண்டனர். பஞ்சாயத்தார் வீட்டுக்கு நேரே நடை பெறும் ரகளையை அறவாழியும் வியப்போடு பார்த்துக்கொண்டு நின்றான். "நான் போலீசுக்கு லஞ்சம் கொடுத்தேன் - தப்பித்துக் கொண்டேன் என்று ஊரெல்லாம் தண்டோரா போடுகிறானே, இவனால் நிரூபிக்க முடியுமா?" என்று கத்தினான், உதட்டில் வழியும் ரத்தத்தைத் துடைத்துக்கொண்டே சிங்காரம் ! 97 'லஞ்சம் மாத்திரமா கொடுத்தாய்? போலீஸ் அதற்கு மாத்திரம் வளையுமா? அழகான தங்கச்சியைக்கூட......" என்று கண்ணன் சொன்னதுதான் தாமதம்; சிங்காரத்திற்கு எங்கிருந்து அந்த வேகம் வந்ததோ தெரியாது; என்ன சொன்னாய்? என்று ஒரே பாய்ச்சல்; புலி பாய்வதுபோல! அவ்வளவு தான்; கண்ணன் தரையிலே சாய்ந்துவிட்டான் சிங்காரம் அவன் மார்பிலே உட்கார்ந்து கொண்டு மாறி மாறிக் குத்திக்கொண்டே யிருந்தான், அவன் ஆத்திரம் தணியுமட்டும் ! தெருவினர்கூட சில வினாடிகள் அப்படியே அயர்ந்து போய் நின்றுவிட்டனர். கண்ணன், சிங்காரத்தின் தங்கையை தங்கையை பேச்சின் நடுவே மிகவும் கேவலமான வகையில் இழுத்துப் பேசியது யாருக்கும் பொறுக்கவில்லை. அதனால் சிங்காரத்திற்கு சிறிது நேரம் அவன் கோபத்தைத் தணித்துக்கொள்ள சந்தர்ப்பம் அளித்து ஒதுங்கிக் கொண்டனர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/134&oldid=1703122" இலிருந்து மீள்விக்கப்பட்டது