உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுருளிமலை.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. சுருளிமலை 137 அறவாழிக்கு மேலும் வியப்பு ஏற்பட்டதே தவிர, விளக்கம் கிடைக்கவில்லை. அருகே சென்று தீர விசாரித்துவிடுவது என்று தீர்மானித்தான். மரத்தடிக்கு வந்தான். தன்னை யறியாமல் அழுதுகொண்டிருந்த சிங்காரத்திற்குத் தன் தோள்படடையில் யாரோ கைவைத்திருப்பது வெகு நேரத்திற்குப் பின்பே தெரிந்தது யார் என்று அறிய திரும்பிப் பார்க்கக்கூட அவன் நினைக்கவில்லை போலும்- கண்ணனாகத்தான் இருக்கும் என அவனே முடிவு கட்டிக் கொண்டானோ - அல்லது அப்படி ஒரு திடீர் உணர்ச்சி அவனை நினைவிழக்கச் செய்ததோ- எப்படியோ சரே 'லெனத் திரும்பியதும் திரும்பாததுமாக அறவாழியின் கன்னத்தில் ஒரு குத்து விட்டான் அறவாழி, வலி தாங்க முடியாமல் தன் முகத்தைப் பொத்திக்கொண்டு பின்னுக்கு நகர்ந் தான். அதன் பிறகுதான் சிங்காரத்திற்குத் தான் தவறு செய்து விட்டோ மென்பது புரிந்தது கண்ணனால் புண்ணாகிவிட்ட அவன் உடல் வேதனைகூட அப்போது மறந்து போயிற்று. அறவாழி யின் முகத்தைப் பார்த்துக்கொண்டே நின்றான். அந்தப் பார்வையில் மன்னிப்புக் கேட்கும் ஜாடையிருப்பதை அறவாழி உணராமல் இல்லை. 66 கவலைப்படாதே! எனக்கும் இந்த ஊருக்கும் சரியான பொருத்தம் - வந்ததும் வராததுமாக சரியான வரவேற்பு! நல்ல அடி-உதை-குத்து-முட்டு- பிரமாதமான உபசரிப்பு! மகத் தான உபசரிப்பு!" என்று சிரித்துக்கொண்டான் அறவாழி சிங்காரத்திற்கு முழு விபரமும் புரியா விட்டாலும், அறவாழி தன்மீது கோபப்படவில்லை யென்பதை அவன் பேச்சிலே காணப்பட்ட மென்மையிலும் இனிமையிலும் தெரிந்துகொண் டான். அருகே சென்று அவன் கன்னத்தைத் தடவி கொடுத்து, தவறுதலாக ஆத்திரத்தில் அடித்து விட்டேன்-மன்னிச்சிடு தம்பி !" என்று தழு தழுத்த குரலில் கெஞ்சினான். அறவாழிக்கு விழிகளில் நீர் துளிர்த்தது. அவனும் சிங்கா ரத்தைத் தழுவியவாறு, வேப்பமரத்து மேடையில் அமர்ந்தான். 46 நீ ஒரு அதிசயமான மனிதன் !" என்றான் அறவாழி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/139&oldid=1703127" இலிருந்து மீள்விக்கப்பட்டது