உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுருளிமலை.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 64 மு.கருணாநிதி 'அதெல்லாம் ஒண்ணுமில்லை அப்படியே அவுங்க சம்மதித் தாலும் நான் அந்தக் கல்யாணம் நடக்க விடமாட்டேன். கண்ணனுக்குப் பெண்ணு கொடுக்கிறதைவிட கடலில் கட்டி மிதக்க விடலாம்!” இப்படி ஆவேசமாகப் பேசினான் சிங்காரம். தன்னுயிர்ப் பொருளைக் காப்பாற்றிடும் வேலைக்கு இன்னொரு துணை வலுவில் கிடைத்திருப்பதை யெண்ணி யெண்ணி மகிழ்ந்தான் அறவாழி, அவனுக்கு சிங்காரத்திடம் இன்னும் நெருங்கி உறவு கொள்ள வேண்டும் போலிருந்தது. GS நாமிருவரும் ஒருநாள் பழக்கத்திலேயே எவ்வளவோ பேசிவிட்டோம். ஆனால்-உன் மனசிலேஉள்ள சுமை எதையும் என்னிடம் இறக்கவில்லை!" என்று வருத்தப்பட்டுக் கொண்டான். கவலைகள் துன்பங்கள் எல்லாம் என்னோடு இருக்கட்டும். நீவேற அதையெல்லாம்கேட்டு வீணா மனதை அலட்டிக் கொள்ளாதே தம்பீ!"-சிங்காரம் கண்களை மூடிக்கொண்டான். அவன் விழிகள் குளமாகியிருப்பதை மறைக்கவே அப்படிச் செய்தான். ஆனால் அவன் நினைத்தற்கு மாறாக, இமைகள் வழியே நீர்த் துளிகள் முட்டி மோதிக்கொண்டு அவன் கன்னத்தை நனைத்தான். 60 பழி தீர்த்துக் கொள்ள சமயம் பார்த்திருக்கிறேன். அந்தப் பாதகன் குடும்பத்திலேயே சம்பந்தம் செய்யத் துடிக் கிறாளே; என் தங்கை! அய்யோ! அப்பா! நான் என்ன செய்வேன்? உங்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை எப்படி நிறைவேற்றுவேன்?" என்று வாய்விட்டு அலறினான் சிங்காரம். முகத்தைக் கையால் பொத்திக்கொண்டு மீண்டும் அழத் தொடங்கினான், " . மகனே! நீ செய்து முடிப்பாய் என்று நம்பித்தான் நான் மகிழ்ச்சியோடு சாகிறேன். அந்தக் குடும்பம் பூண்டற்றுப் போய் விட வேண்டும். குழந்தை குட்டிகள் இருக்கிறார்களே என்று கொஞ்சமும் கருணை காட்டாதே! ஊரார் தூற்றுவார்களே யென்று ஒரு கணமும் தயங்காதே! சட்டம் தடுக்குமே யென்று த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/146&oldid=1703134" இலிருந்து மீள்விக்கப்பட்டது