உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுருளிமலை.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 மு.கருணாநிதி னேன்? இப்போது கேள்விகள் எழுகின்றன ஆனால் இளம் பிரா யத்தில் இந்தக் கேள்விகள எழுவதில்லை ஆனால் நிச்சயமாகச் சொல்வேன்; இப்போது அப்படி ஒரு கப்பலைச் செய்யமாட்டேன். அதன் பின்னால் மழையில் ஓடவும மாட்டேன். இப்போது நான் கட்டுகிற கப்பல் வாழ்ககைக் கப்பல் அதில் நானும் என்ராணி யும் ஏறிக்கொள்வோம். புரிகிறதா பொன்மணி ! இந்தக் கப்பல் கட்டும் வேலை சிறுபிள்ளைத்தனமானது அல்ல என்பதை தயவு செய்து தெரிந்துகொள்!' பெரியவர்கள் கட்டுகிற கப்பலும் சமயத்தில் மூழ்கிவிடுகிற தல்லவா? 010 உலகம்கூடத்தான் ஒரு காலத்தில் சிதறிப் போய் விடும் என்கிறார்கள். சூரியன்கூட ஒரு காலத்தில் உடைந்த கண்ணாடித் துண்டுகள் போல தூள் தூளாகப் போய்விடக்கூடும் அதை யெல்லாம் நினைத்தால் மணிதர்கள் வாழவே முடியாது ! "உங்கள் படிப்புக்கு நான் எம்மாத்திரம்? எதைச் சொன் னாலும் நம்ப வேண்டியது தானே ? * "அய்யோ-இந்தக் காலத்தில் படித்தவன்தான் ஊரை அதிகமாக ஏமாற்றுகிறான். அதனால்தான் எல்லோரும் படிக்க. வேண்டுமென்று அறிஞர்கள் கூறுகிறார்கள்!' 66 ஏன்? எல்லோரும் சேர்ந்து ஊரை ஏமாற்றவா?" இல்லை! எல்லோரும் படித்துத் தேர்ந்து விட்டால் பிறகு யாரும் யாரையும் ஏமாற்ற முடியாதல்லவா?" "உங்கள் ஊரில் வந்து தகடு எடுப்பதாகச் சொல்லீ எல்லோரையும் ஏமாற்றிய ஏமாற்றிய எங்கள் ஊர் கண்ணன் பெரிய படிப்பாளியா? 66 பழைய கால புராணங்களை யாவது படித்திருக்கிறான் அல்லவா? அதிருக்கட்டும் - நமது அதிருக்கட்டும் - நமது ஆராய்ச்சி எங்கேயோ சென்று கொண்டிருக்கிறது . !" எனப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, பொன்மணியை அன்போடு தழுவிக்கொண்டான் அறவாழி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/164&oldid=1703152" இலிருந்து மீள்விக்கப்பட்டது