உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுருளிமலை.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுருளிமலை +5 நாம் இருவரும் சென்றால் ஊரார் பார்த்து என்ன சொல் வார்கள்?' இந்த மழையில் யாரும்வெளியே கிளம்ப மாட்டார்கள். நாமிருவருந்தான் ஒரே குடையின் கீழே தெருவிலே முழங் காலைத் தொட்டுககொண்டு ஓடும் தண்ணீரில் நடந்து செல்லம் போகிறோம். நமக்குத் திரு மண ஆன னபிறகு இப்படி ஒரு அருமையான வாய்ப்பை இந்த மழை விரைவிலே அளிக்கு மோ என்னவோ- அதனால் இப்போதே அந்த இன்பத்தை சுவைக்க லாம்; புறப்படு!" என்று குடையை குடையை எடுத்து விரித்தான் அறவாழி குடைக்குள்ளேயிருந்து ஒரு தேள் கீ ழே விழுந்து ஓட இடம் பார்த்தது தேளைப்பார்த்ததும பொன்மணியின விழிகள் அவளை யறியாமலே அறவாழியின் விழிகளோடு மோதிக் குறும்பு புரிந்தன, தேளைப் பிடித்து தருகிறேன் ; கையில் கொட்டிக் கொள் கிறாயா?" என்றான் அவன் 44 “ வேண்டாம் - வேண்டாம்! முன்பு நீங்கள் என் காதில் போட்ட மந்திரம்தான் என்னை இந்தக கதிக்குக கொண்டுவந்து விட்டது மறுபடியும் காதில் ஊதி ஊதி என் இருதயத்தை பலூன் மாதரி பெருக்க வைத்து வெடித்தும் போகுமபடிச் செய்து விடா தீர்கள்!" எனக் கூறி அவன் தோளில் முகத்தைச் சாயத்துக் கொண்டு ஒரு நீண்ட பெருமூச்சு விட்டாள் பொன்மணி. காற்றின் வேகம் அதிகமானதே தவிர குறையவில்லை, மழையும் கொட்டிக் கொண்டேயிருந்தது. எப்படியும் வீடு போய்ச் சேரவேண்டும் என்ற துடிப்பு பொன்மணிக்கு அதிகமாகி விட்ட காரணத்தால் அறவாழி புறப்பட்டான். காற்றை எதிர்தது, கதவைத்திறந்து கொண்டு வெளிககிளம்பினார்கள். அறவாழி குடையை மிகவும் பலமாகப் பிடித்துக் கொள்ள யிருந்தது. அவனோடு நெருங்கி பொன்மணி குடையின் கீழே நடந்தாள். வேண்டி டி வானமே இருண்டு, பூமியையும் இருளடையச் செய் திருந்தது. கண் தெரிய முடியாத அளவுக்கு ஒரே மழை! மழைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/167&oldid=1703156" இலிருந்து மீள்விக்கப்பட்டது