உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுருளிமலை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுருளிமலை 15 எப்பொழுதும் புன்முறுவல் பூத்திருக்கும் முகமும் ஆழ்ந்த. யோசனையை வெளியிடுவது போன்ற விழிகளும் கொண்ட இளைஞன், என்றும்போல் அன்று காலையிலும் குழலிசையில் தன்னை மறந்து மூழ்கியிருந்தான். அதிகாலையில் வீட்டிலிருந்து புறப்படும்போது, அவனுக்கு முன் எழுந்து வீடு வாசல் பெருக்கி, தெருவில் கோலம் போட்டு விட்டு, பானை செய்யும் வேலையில் ஈடுபட்டிருந்த அவன் அன்புச் சகோதரி பொன்மணி " சாப்பிடாமல் போகாதே எங்கும்! நல்ல பழையதும், எருமைத் தயிரும், தொட்டுக் கொள்ள கிடாரங்காய் ஊறுகாயும் வைத்திருக்கிறேன். சாப்பிட்டுவிட்டுப்போ ! " என்றாள். 66 68 'கொஞ்ச நேரம் கழித்து சாப்பிடுகிறேன் அக்காள்! " எனக்கூறிவிட்டு நடந்த அவனைத் தடுத்து, தம்பீ, கொஞ்சம் இங்கேயே உட்கார்ந்து குழலூதேன்!" என்று அவள் கோரிக்கை விடுத்தாள். 'அதெல்லாம் முடியாது!" என்று சர்வசாதாரணமாகக் கூறிவிட்டு வேப்ப மரத்தடிக்கு வந்துவிட்டான். அங்கே இசை முழக்கம் செய்தான். இடையிடையே வேப்பமரத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டான். அப்படி அண்ணாந்தபோது முதல் தடவை அவன் முகத்தில் வியப்பு ஏற்பட்டது! "அடுத்த தடவை சிறு பீதி தலை நீட்டி உடனே மறைந்தது! மூன்றாவது தடவை அலட்சியமாகப் பார்த்தான்! பிறகு மேலே நிமிர்ந்து பார்க்கவேயில்லை; குழலூதுவதில் முழுக் கவனமும் செலுத்தி விட்டான்! 66 ஆகா! பலே! பலே!! பிரமாதம்!" எனக் கைதட்டிய வாறே அங்கே வந்தான், தீச்சட்டி சிங்காரம். வாண்ணே! எங்க ரொம்பநாளாய்க் காணோம்?" என ஆவலுடன் கேட்டான் சுருளிமலை. 65 அட போப்பா - அதேயேன் கேக்கிறே? பதினைந்து ஊரிலே தீச்சட்டி ஆட்டம்! எல்லா ஊர்க்காரப் பயலும் தீச்சட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/17&oldid=1694881" இலிருந்து மீள்விக்கப்பட்டது