உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுருளிமலை.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 மு. கருணாநிதி இந்தச் செய்தி ஊரெங்கும் பரவியது. பக்கத்து கிராமங் களுக்கும் எட்டியது. எங்கும் ஒரே பரபரப்பு ! "என்னடா இது; பழையகாலத்திலே கேள்விப்பட்டிருக் கிறோம்; யானையை அடக்கினான்-குதிரையை அடக்கினான்- பெண்ணைக் கருயாணம் செய்து கொண்டான் என்று! இப்போது கண் எதிரேயே நடக்கப் போகிறதே!' - எனப்பேசி வியப்பி லாழ்ந்தார்கள் அனைவரும். அமைதியின்றித் தடுமாறிக் கொண்டிருந்த அறவாழியின் முன்னே சிங்காரம் வந்துநின்றான். "என்ன அறவாழி! நான் எதிர்பார்க்கும் நேரம் மிக சீக்கிரமே வரப்போகிறது !" என்றான். . " ஏது? போட்டி நாள்தானே?" என்றான் அறவாழி. 60 போட்டி மட்டுமல்ல! போட்டியிலே கண்ணன் தோற் பான். தோற்றதும் அவனுக்குக் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதையிலே ஊர்வலம் விடுவேன். என் தந்தைக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விடுவேன்!" "வாக்குறுதியை நிறைவேற்றுவது மட்டுமா? பொன்மணியு மல்லவா கிடைக்கப் போகிறாள்!"- அறவாழி, தன் வேதனையை மறைத்துக் கெர்ண்டு பேசினான். "என் தந்தை எனக்கு ஏன் இப்படிக் கட்டளையிட்டார் என் பதை உனக்குச் சொல்லவேண்டுமல்லவா? அதற்காகவே இங்கு வந்தேன்!" என்று பல்லைக் கடித்துக்கொண்டு கூறினான் சிங்காரம். அவ்வளவு ஆத்திரம் அவனுக்கு அந்தக் கண்ணன் குடும்பத்தின்மீது! "சொல்லுகிறேன் கேள்! என்று அவன் மடமட வென்று பேச ஆரம்பித்தான். 66 அறவாழிக்கு சிங்காரத்தின் கதையைக்கேட்க நேரமும் இல்லை; நினைப்பும் இல்லை. இப்போது எனக்குக் கொஞ்சம் வேலையிருக்கிறது" என்று சொல்லி அவனிடமிருந்து மெதுவாக நழுவிவிட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/184&oldid=1703173" இலிருந்து மீள்விக்கப்பட்டது