உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுருளிமலை.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 மு. கருணாநிதி சிவாவுக்கு சிறிது நேரம் ஓய்வு வேண்டும !" என்று கூறி சுருளிமலை காளையை ஓட்டிக் கொண்டு போனான். பிறகு பதினைந்து நிமிடம்கழித்துக் காளையுடன் சுருளிமலை திடலுக்கு வந்தான். இப்போது கண்ணன். போருக்குத் தயாராக நின்றான். சீட்டு அவன்பேருக்கு விழுந்தது. கண்ணனின் முதல் பாய்ச்சல் மிக முரட்டுப் பாய்ச்சலாக அமையவே, காளை சற்றுமிரண்டு கீழே விழுந்தது. ஆயினும் உடனே எழுந்து கண்ணன்மீது பாய்ந்தது. போட்டியைக் கண்ணுற்ற அனைவரும் வெற்றி கண்ணனுக்கே எனமுடிவு கட்டினார்கள். கற்பூரத்தின் நெஞ்சு நெருப்பாகியது. தீச்சட்டி சிங்காரத்தைவிட கண்ணன் வெகு தீவிரமாகக் காளையுடன் போரிட்டான். போரின் போக்கு கண்ட அறவாழி, பொன்மணி நின்ற பக்கம் திரும்பினான். அவள் கண்களை மூடிக்கொண்டு எங்கேயோ சிந்தையை அலையவிட்டுக் கொண்டிருந்தாள். அக்காளையும் அறவாழியையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டு நின்ற சுருளிமலை அக்காளிடம் சென்று, "அக்கா! கவலைப்படாதே! கண்ணன் தோற்றுவிடுவான்!" என்றான். அவன் தோற்றால் எனக்கென்ன ? அறவாழி ஜெயிக்க வேண்டுமே!' என்று அவள் சொல்லவில்லை. நினைத்துக் கொண்டாள். அதற்குள், கூட்டத்திலிருந்து பெருங்கூச்சல் கிளம்பியது. கோயில்காளை சிவாவின் காலடியிலே கண்ணன் ரத்தவெள் ளத்தில் மிதந்துகொண்டிருந்தான் அவனது வயிற்றுப் புறத்தைக் காளையின் கொம்புகள் ருசி பார்த்துவிட்டன. "உயிருக்கு ஒன்றும் ஆபத்து இல்லை!" எனத்தைரியம்கூறி வைத்தியர்கள் அவனை அவசர அவசரமாகத் தூக்கிச்சென்றனர். அறவாழியை பொன்மணி பார்த்தாள். ஓடிவந்து அவன் காலிலே விழுந்து. - என்னை மறந்துவிடுங்கள் - இந்தப் போட்டி உங்களுக்கு வேண்டாம்!" என்று கதறினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/192&oldid=1703181" இலிருந்து மீள்விக்கப்பட்டது