உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுருளிமலை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுருளிமலை 21 அந்தச் சூழ்நிலையிலேதான் தீச்சட்டி சிங்காரம் தான் கற்றவித்தையைக் காட்டி அனைவருடைய பாராட்டுதலையும் பெற்றுக் கொண்டிருந்தான். மெள்ள மெள்ள தீச்சட்டி ஊர் வலம் பல தெருக்களைக் கடந்து கடைசித் டசித் தெருவின் கோடிக்கு அந்தக் கோடியில் கொஞ்ச நேரம் ஆட கோவில் நிர்வாகிகள் அவனைக் கேட்டுக் வந்து விட்டது. வேண்டுமென்று கொண்டார்கள். 1 ரொம்பக் களைப்பாயிருக்கு, கொஞ்சம் தண்ணி வேண் டும்" என்று கூறிக்கொண்டே கண்ணடித்துக் காட்டினான் சிங்காரம். கண்ணடித்துக் கேட்கும் தண்ணீர் எப்படிப்பட்ட தென்று புரிந்து கொண்ட நிர்வாகிகள் ஒரு கோப்பையில் அதை'க் கொண்டு வந்து கொடுத்தார்கள். சிங்காரம் அதை அருந்திவிட்டு ஆடுவதற்குத் தயாராகிவிட்டான். அதற்குள் அந்தத் தெருவிலேயுள்ளோர் தீச்சட்டிக்கு எண்ணெய் ஊற்று வதற்கு வரிசை வரிசையாக வர ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு வரும் தாங்கள் கொண்டு வந்த கிண்ணத்தில் உள்ள எண் ணெயை சட்டியில் ஊற்றுவார்கள். உடனே சிங்காரம் அவர் கள் நெற்றியில் விபூதி, குங்குமத் திலகங்களையிட்டு ஆசீர் வாதம் செய்து அனுப்புவான். அப்படி வந்த வரிசையிலே தான் அவன் உள்ளத்தைக் கவர்ந்துவிட்ட 'அவளு'ம் இருந்தாள். அவள் எண்ணெயை ஊற்றியதும், அவள் நெற்றியில் சிங்காரம் குங்குமத் திலகத்தையிடுவதற்கு முயன்றான். ஏனோ அவன் விரல்கள் நடுங்கின. சமாளித்துக்கொண்டு குங்குமத்தை வைத்துவிட் டான். ஆனால் அருகே இருந்தவர்கள் எல்லாம் சிரித்துவிட் டார்கள். அவன் ஆச்சரியத்தோடு பார்த்தான். குங்குமப் பொட்டு அவள் நெற்றியிலே இல்லை; மூக்கின் நுனியிலே இருந்தது. அவனுக்கும் வெட்கம் ; அவளுக்கும் வெட்கம்: வேடிக்கை பார்த்தவர்களுக்கு விஷயம் விபரமாகப் புரியவில்லை. கோயில் நிர்வாகிகளோ, தண்ணீர் தந்த தடுமாற்றம் " எனத் தங்களுக்குள் சிரித்துப் பேசிக்கொண்டனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/23&oldid=1694906" இலிருந்து மீள்விக்கப்பட்டது