உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுருளிமலை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 மு. கருணாநிதி தில் அதன் காலில் சிக்கி அவளது நீல நிற மேலாடை கீழே நழுவிற்று. பூனையைவிட்டு, மேலாடையைச் சரி செய்து கொள்ள அவள் கைகள் அவசரமாக ஓடின. அதற்குள் “தடார்" என்ற சப்தம் ! சிங்காரத்தின் கையிலே இருந்த தீச்சட்டி கீழே விழுந்து நொறுங்கி விட்டது. அவள் களுக் " என்று சிரித்து விட்டாள். அவளுக்குப் புரிந்துவிட்டது; தீச்சட்டி எப்படிக் கீழே விழுந்தது என்பது! எல்லாம் இந்தப் பூனை பண்ணிய குறும்பு என்று மனதிற்குள் நினைத்தவாறு மீண்டும் ஆடை. திருத்தி நின்றாள். பூனை திண்ணையிலேதான் உட்கார்ந்திருந்தது. சிங்காரம் தன் தவறுதலை வெளிக் காட்டிக்கொள்ள அஞ்சி, ஊருக்கு ஏதோ ஆபத்து வரப்போகிறது! அதனால்தான் இந்த அப சகுனம் !* என்று ஓர் அதிர்ச்சி வேட்டை வெடித்தான்.பக்தர்கள் தொங்கிய முகத்துடனும் பீதி நிறைந்த கண்களுடனும் அதை விட்டு நகர்ந்தனர். தாயே! அம்பிகே! எங்களைக் காப்பாத் தும்மா!" என்று கோயிலை வலம் வர ஆரம்பித்தனர். . 66 சிங்காரம், அவன் தங்கியிருந்த இடத்தில் இருப்புக் கொள் ளாமல் அங்கு மிங்கும் அலைந்து கொண்டிருந்தான். அவள் யார்?' என்ற கேள்விக்கு அவன் யாரிடம் பதில் பெற இயலும் ! யாரையாவது போய் இதைக் கேட்டால் அவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்களோ? அப்படிக் கேட்பதாயிருந்தா லும் என்ன அடையாளம் சொல்லி அவளைப்பற்றி விசாரிப்பது ? திடீரென அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. "தவறி மூக்கிலே குங்குமம் இட்டேனே-அந்தப் பெண் யார் ? " என்று கேட்டுவிடுவது எனத் தீர்மானித்துக் கொண்டான். கோயில் நிர்வாகி யொருவரிடம் மெதுவாகப் பேச்சைத் தொடங்கினான். அவர் விளக்கம் தந்தார். அவளைப் பற்றி நானும் விசாரித்துக் கொண்டுதானிருக் கிறேன். அவள் இந்த ஊருக்கு வந்து ஒரு மாதமாகிறது. யாரும் அவளுக்குத் துணையிருப்பதாகவும் தெரியவில்லை. தனிமையில் தான் அந்த வீட்டில் வாழ்ந்து வருகிறாள். சிலபேரை விட்டு விபரங் கேட்கச் சொன்னேன். அவர்கள்மீது எரிந்து விழுந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/26&oldid=1694909" இலிருந்து மீள்விக்கப்பட்டது