உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுருளிமலை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$35! அறிமுகம் கதை சொல்லும் முறை பலவகை! திடீரென்று ஒரு வீட்டில் நடு ராத்திரியில் ஒரு பயங்கர சப்தம் கேட்கிறது. தெருவிலுள்ளோர் அனைவரும் பரபரப்போடு அங்கு ஓடுகிறார்கள். வீட்டுக் கதவு திறந்திருக்கிறது. விளக்கு மங்கலாக எரிகிறது. யாரோ முணகிடும் சப்தம் காதில் விழுகிறது. சிறிது நேரத்தில் அந்த ஒலியும் நின்று விடுகிறது. விளக்கைப் பெரிதாக்கிப் பார்த்தால் சுந்தரவடிவுடையாள் ஒருத்திப் பிண மாகக் கிடக்கிறாள். அவளை ஊரார் அறிவர். ஊருக்கே அவள் மகாலட்சுமி எனப் போற்றிப்புகழ்வர். அவள் பிணமாகிவிட்டாள். அவள் கணவனையோ காணவில்லை. அவன் எங்கே போனான்? அவள் ஏன் கொலை செய்யப்பட்டாள்? இந்தக் கேள்விக் குறி களிலேயிருந்தே கதையின் சிக்கல்கள் ஆரம்பமாகிவிடும். நல்ல நிலாக் காலம்! வானம், வெள்ளியை உருக்கி வார்ப் பது போல் உலகமெங்கும் ஒளிபெற்றுத் திகழ்ந்தது. புள்ளி னங்கள் தங்கள் கூடுகளில் தங்கி ஓய்வு பெற்றுக்கொண்டிருந் தன. அந்தக் கிராமமே அமைதி மங்கையின் அணைப்பில் மயங்கி மயங்கி நினைவிழந்திருந்தது. தெருக்களில் குங்கும நிறத்துப் பாதிரிப் பூக்கள் இறைந்து கிடந்தன. நீல நில வொளியில் தன்னந் தனியாக ஒரு அழகி மெல்ல நடந்து கொண்டிருந்தாள். அவள் யார்? அவள் முகத்திலே வேதனை ரேகைகள் படர்ந் திருக்கக் காரணம் என்ன ? இப்படியும் கதைகள் துவங்குவ துண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/5&oldid=1694866" இலிருந்து மீள்விக்கப்பட்டது