உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுருளிமலை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுருளிமலை 49. கோயில் நிர்வாகி அவளைப் பார்த்து வெற்றிப் புன்னகை புரிந்தார் அவளும் சிரித்தாள். நிர்வாகி, கூடத்திலேயிருந்த பெரிய மரப்பெட்டியைத் திறந்தார். அதற்குள்ளே அழகான செல்லப் பெட்டி யொன்றிருந்தது. அதிலேயிருந்து இரண்டு ஐந்து ரூபாய் நோட்டுக்களை எடுத்து மைனாவிடம் நீட்டினார். . מ அவள் போதாது' என்பதுபோல் தலையசைத்தாள். நிர்வாகி மீண்டும் சென்று பெட்டியைத் திறந்தார். மைனா. எதிர்பார்த்த சமயம் கிடைத்து விட்டது. அருகேயிருந்த எண் ணெய் வழியும் குத்துவிளக்கை அவசர அவசரமாகத் தூக்கினாள். தூக்கிய வேகத்தில் நிர்வாகியின் பிடரிமீது ஓங்கி அடித்தாள். நிர்வாகி "அய்யோ" என்று கத்திய சப்தம்கூட வெளியே கேட்க வில்லை. செத்தான. பிழைத்தானா அந்தச்சண்டாளன் என்று அவள் பார்த்துக்கொண்டிருக்கவில்லை. கதவைத் திறந்து கொண்டு வெளியே ஓடிவந்தாள். வீட்டு வாயிற் புறத்திலிருந்து வெறிக்கப் பார்த்தாள். பீதாம்பர பாகவதர் தன் பிரியத்துக்குரிய பூனைக்குட்டியைத் தூக்கிக் கொண்டு தூரத்தில் போய்க் கொண் டிருப்பது தெரிந்தது. பின்னாலேயே ஓடினாள். அவரோ திரும்பா மல் நடந்துகொண்டிருந்தார். ஓடியவள் ஏதோ ஒரு நினைவில் நின்றாள். அரைப் பின் தொடர அவளுக்கு இஷ்டமில்லை வெறிபிடித்தவள்போல எதிரே யுள்ள பரந்த வெளியை உற்று நோக்கினாள் உடம்பெல்லாம் எரிவது போலவும் உள்ளத்தில் தழலைக் கொட்டியது போலவும். உணர்ச்சி அவளை ஆட்டிப் படைத்தது. அவளாகவே "பாபி! யாபி!" என்று பெருமூச்சோடு கலந்து முணு முணுத்துக் கொண்டாள். வாழ்க்கை முகப்பில் எவ்வளவோ உற்சாகத்தோடு காலெடுத்து வைக்கிறோம் என்ற மகிழ்ச்சியில் கர்வத்தோடு நுழைந்த காரிகை, கசங்கிய மலராய்-கருகிய தளிராய் சூன்ய மாகத் தோன்றும் எதிர்காலத்தை நீர் மல்கிய கண்களோடு வரவேற்க வேண்டிய நிலைபெற்று விட்டாள். 66 இனி அவளுக்கு யார் துணை? தீச்சட்டி சிங்காரம்தானா? அவனிடம் சென்று எப்படித் தன் நிலையை விவரிப்பது? " வனை வெறுத்தேன். காதலனாய் உன்னைப் பெற்றேன். காமுகன் கண

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/51&oldid=1694935" இலிருந்து மீள்விக்கப்பட்டது