உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுருளிமலை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுருளிமலை 55 ஊர் ஆவேசம் வந்தால் அவ்வளவுதான், வீட்டு உத்திரம் வரையில் எழும்பிக் குதிப்பாள். பரணியில் ஏறி உட்கார்ந்து கொள்வாள். பத்திரகாளியின் ஆவேசம் என்று ஊரார் கூறுவார்கள். குறி கேட்க ஓடிவருவார்கள். சிங்காரத்துக்கு கற்பூரத்தை எப்படி சமாளிப்பது என்பது பெரிய பிரச்னையாகி விட்டது. மக்கள் கூடிவிட்டால் என்ன செய்வது? எல்லோரிடமும் தன் ரகசியத்தை அவள் கூறிவிட்டால் சங்கடமாகி விடுமே அதற் காகக் கதவை இழுத்து சாத்திக்கொண்டு, கற்பூரத்தை நோக்கி கரங்குவித்து, அம்மா, தாயே! பத்ரகாளி! என்னை மன்னிச்சுடு !" என்று மன்றாடினான். 66 -O மன்னிக்கிறேன்! அடேய்- அவளை மறந்துடுறியா? மறந் துடுறியா?" என்று கற்பூரம் கத்தினாள். கத்திக்கொண்டே சிறிது நேரங் கழித்து மயங்கிக் கீழே விழுந்தாள். சாமி, மலையேறி விட்டது! சிங்காரத்திற்கு சிறிது சங்கடம் விட்டது. வழக்கம்போல அவள் முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிவித்தான். கற்பூரம் கண்களைக் கசக்கிக்கொண்டே எதிரே யிருந்த அண்ணனைப் பார்த்தாள். அவள் கண்களி லிருந்து நீர் வழிந்தது. "அழாதே கற்பூரம்!" என்றான் பரிவோடு சிங்காரம். 'அண்ணா! அந்த வாழாவெட்டியை மறந்துடு. அதெல் லாம் நம்ம குடும்பத்துக்கு ஆகாது. நான் உனக்கு அருமை யான பெண்ணு பாத்து வச்சிருக்கேன்!" என்று தழுதழுத்த குரலில் கூறினாள் கற்பூரம். யார் அப்படிப்பட்ட அதிசயப் பெண்ணு?" என்று வெறுப் போடு கேட்டான் சிங்காரம். நம்ப பூஞ்சோலையம்மா மகள் பொன்மணி!" என்றாள் பூரிப்போடு கற்பூரம். பொன்னும் வேண்டாம்; மணியும் வேண்டாம்; எனக்கு என் மைனாதான் வேண்டும்!" என்று வேகமாக வெளியே நடந் தான் சிங்காரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/57&oldid=1694941" இலிருந்து மீள்விக்கப்பட்டது