உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுருளிமலை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 60 மு. கருணாநிதி மருத்துவர் முயற்சியால் சிங்காரம் மெதுவாகக கண்களைத் திறப்பதற்கும், மறுபடியும் கற்பூரம், ஹோய்" என்று கத்திக் கொண்டு சாமி ஆட ஆரம்பிப்பதற்கும் சரியாக இருந்தது. И 750 ஏ ஏ மக்களே! கேளுங்க இந்த ஜீவனுக்கு ஏற்பட்டி ருக்கிற ஆபத்து, சாதாரண ஆபத்தல்ல! வேப்ப மரத்தடியிலே தூக்கு மாட்டிக்கிட்டாளே அவளோட உயிரு பேயா மாறி இந்த ஜீவனைத் தொத்திக்கிட்டுது! ... " என்று கற்பூரம் கூச்சல் போட்டாள். அதுகேட்ட, சிங்காரம் 141 900 100 ஆமாம்' ஆமாம்! என்னைத் தான் தொத்திகிட்டுது! என் மைனாகிட்ட என்னை விடுங்க மைனா ! மைனா !! என்று அலறியவாறு எழுந்து ஓட முயன்றான். அவனை மற்றவர்கள் விடவில்லை. பிடித்துப் படுக்க வைத் தார்கள். கற்பூரம் தொடர்ந்தாள். பார்த்தீங்களா,பார்த்தீங்களா; பேய்ச் சேட்டையை! வடக்களே ! இந்த ஜீவனை வெளியே விடக்கூடாது! பத்து நாளைக்கு இந்த வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது இந்த ஜீவன்! அப்படி வெளியே போனால் இந்த ஜீவன் மேலிருக்கிற பேய், இந்த வீ ல இருக்கிற யார் மேலாவது தொத்திக் கொள்ளும்.. பத்து நாளைக்கு இங்கேயே படுக்க வைத்து மந்திரம் தந்திரம் மருத்துவம் செய்து பேயை அணு அணுவாகக் கொல்ல வேண்டும். அப்பத்தான் இந்த ஜீவனும் பிழைக்கும் ! வீட்ல இருக்கிறவங்களும் தப்ப முடியும் ! " - கற்பூரம், சாமியாடிக் கீழே விழுந்தாள். சாமி, மலையேறி விட்டது ஒரு விதமாக ! பூஞ்சோலைக்குத் திகில் பிடித்துக் கொண்டது வெளியே போனால் வீட்டிலிருப்பவரைப் பேய் சிங்காரம் பிடித்துக் கொள்ளுமே என்ற பீதி அந்த அம்மாளை ஆட்டிப்படைத்தது. மலையேறிய கற்பூரமோ, ஒன்றுமறியாதவன்போல பூஞ் சோலையிடம், தாவிச் சென்று அய்யோ! எங்க அண்ணனுக்கு, என்னா?" என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்தாள். !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/62&oldid=1694948" இலிருந்து மீள்விக்கப்பட்டது