உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுருளிமலை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுருளிமலை 'அவன் தான் தீச்சட்டி சிங்காரம்! ” 65 சிங்காரமா? அந்த ஆளுக்குப் பிசாசும், பைத்தியமும் சேர்ந்து பிடிச்சு இப்பத்தானே இந்தப் பக்கமா ஓடினாரு! சீக்கிரம் போங்க, பிடிக்கலாம்!" என்று று சாதாரணமாகச் சொன்னான் சுருளிமலை. -66 போலீசார் அவன் காட்டிய திக்கில் விரைந்து சென்றனர். அவர்கள் போனதும் சுருளிமலை, உள்ளே சென்று கதவைத் தாழ் போட்டான். அம்மாவையும் அக்காளையும் கூப்பிட்டான். ஆபத்து! ஜாக்ரதை! இவரை வெளியே போகவே விடக் கூடாது.போனால் அவ்வளவுதான்!" என்று எச்சரித்தான். பொன்னையாவுக்குப் போலீசாரை ஏமாற்றுவது கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. லொக் லொக்' என்று இருமிக் கொண்டே சுருளிமலையைக் கூப்பிட்டு, அடேய்! நமக் கேண்டா இந்த வம்பு வழக்கெல்லாம்!" என்று அதட்டினார். சுருளிமலை, அப்பாவுக்கு பதில் சொல்லவில்லை. அவருடைய பேச்சைக் கணக்கிலே சேர்க்காதவன்போல், கற்பூரத்தைப் யார்த்து-" நீ உன் வீட்டுக்குப் போ ! எல்லாம் நாங்க பார்த்துக் கிறோம் - நீ யாருக்கிட்டேயும் எதையும் உளராதே! நீயும் வீட்ல இல்லேன்னா போலீசுக்கு சந்தேகம் அதிகரிக்கும், என்று அறிவித்தான். 99 கற்பூரமும் தான் எதிர்பார்த்தபடி சந்தர்ப்பம் கிடைத்தது என்ற திருப்தியும், எதிர்பாராத குற்றச்சாட்டு அண்ணன் மீது சுமத்தப்படுகிறதே என்ற ஏக்கமும் ஒன்றை யொன்று மோதிட, அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டு, இஷ்ட தேவதையைப் பிரார்த்தனை செய்து விபூதி யெடுத்து அண்ணனின் நெற்றியில் தடவிவிட்டு வீட்டுக்குப் புறப்பட்டாள், கொல்லைப்புற வழியாக! சுருளிமலை சிறிது நேரம் மௌளமாக சிங்காரத்திற்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தான். தன் பேச்சுக்கும் கூச்ச லுக்கும் அந்த வீட்டில் மதிப்பில்லாமல் போய் விட்டது என்ப தையும், தன் புலம்பலை பேய்க் கூச்சல் என்று அவர்கள் கருதியிருப்பதையும் எண்ணி எண்ணி உள்ளுக்குள் வேதனைப் பட்டுக் கொண்டிருந்த சிங்காரம். மெதுவாக அன்புடன் சுருளி மலையை " தம்பீ!" என்று அழைத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/67&oldid=1694954" இலிருந்து மீள்விக்கப்பட்டது