உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுருளிமலை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுருளிமலை 5 பாடத்தின் "கோரஸ்"! இப்படி ஊரே உயிர்ப்புள்ளதாகக் காட்சி யளிக்கும். அந்த ஊரில் நம் கதைக்குத் தொடர்புடையவர்களில் தலையானவர்களைத் தேடுவோம். முதலில் நம் கண்ணில் படுவது, அதோ அந்தக் கோயில் காளை தான் !.... า சிவன் கோயில் காளை 'சிவா' என்றால் அதை யாரும் வெறித்துக் கூடப் பார்க்கமாட்டார்கள். பார்ப்பது ' 'பாபம்' என்பது மாத்திரமல்ல; அவ்வளவு பயம் அந்த ஊராருக்கு அதன்மீது! வீதியில் கம்பீரமாக ராஜ நடை போட்டுக்கொண்டு அது செல்லும்போது வீட்டோரங்களிலும், வேலிப் பக்கங்களி லும் ஒதுங்கி நின்று வியர்வையால் மேனியை ஈரமாக்கிக் கொள் வர், அவ்வூரார்! கொழுப்பேறிய உடல்-இரும்பினும் வலுவான கொம்புகள் கருநீலமெனப் பளபளக்கும் ரோமம் அடர்ந்த தோல்-அந்த முரட்டுக் காளையின் கண்களிலே மட்டும் ஒரு கனிவு தென்படுகிறதென ஊரார் சொல்வர். ஆனால் அருகே நெருங்க அஞ்சுவர். பற்று, பாசம், பந்தம், சொந்தமெல்லாம் மனித இனத்துக்கு மட்டுந்தானா தனியுடைமை ? மாடுகளுக்கு அவையெல்லாம் இல்லையா என்ன? சொல்லப்போனால் மனிதனை விட அதிகமாக உழைக்கின்றன; அவனைவிட அதிகமாகத் தன்னை வளர்த்தவனிடம் விசுவாசம் காட்டுகின்றன. - பலநாள் வளர்த்துப் பணத்துக்காக வேறொருவனிடம் விற்று விட்டால் சாமான்யத்தில் அந்த வீட்டைவிட்டு நகரு கிறதா மாடு! எத்தனை தடவை தன்னை வாங்கியவனை ஏமாற் றிவிட்டு முதலில் இருந்த இடத்துக்கு ஓடிவந்து விடுகிறது ! விற்றவன் விரட்ட விரட்ட, இறுதியில் அதுவாக ஒரு முடி வுக்கு வந்து...தன்னை வெறுத்துப் பணத்தைப் பெரிதென மதித்தவனைவிட, பணம் கொடுத்துக் தன்னை விரும்பியவனே மேலென்ற தீர்மானம் செய்து கொண்டோ என்னவோ...வாங் கியவனிடமே அன்பு காட்டத்தொடங்கி விடுகிறது. அந்த மாட்டினத்தில் சிறப்பும் செழிப்பும் மலிந்த குடும்பத்தில் பிறந் ததுதான் கோயில் காளை சிவா ! சிவாவை மக்கள் ஆண்ட வனின் வாகனமென்றே கருதி மரியாதை செலுத்தினர். ஆனால் அதைத் தனக்கு வாகனமாக்கிக்கொண்டான். சுட்டிப் பயல்-அவன்தான்... ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/7&oldid=1694868" இலிருந்து மீள்விக்கப்பட்டது