உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுருளிமலை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 மு. கருணாநிதி அன்றைக்கும் அதே உற்சாகத்துடன்தான் வியாபாரத் திற்குக் கிளம்பினாள். என்றும்போல் பக்கத்து ஊர் வெள்ளிச் சந்தையில் சரியான வியாபாரம். காசை முடிந்துகொண்டு, களிப்பை அடக்கமுடியாமல், வெறுங் கூடையுடன் ஊருக்குத் திரும்பி வந்துகொண்டிருந்தாள். என்றுமில்லாத அதிசயமாக அன்றைக்கு வழியிலே அதிக ஜன நடமாட்டமில்லை. பொழுது போவதற்குள் வீட்டிற்குத் திரும்பிவிட வேண்டுமென்று வேகமாக நடந்தாள். பாதி தூரம் வருவதற்குள்ளாகவே வானம் இருண்டது. இடியும் தொடர்ந்து மழைத் தூறலும் தொடர்ந்தன ! பொன்மணி இன்னும் வேகமாக நடந்தாள். மழை கனமாகவே வந்துவிட்டது. பொன்மணியின் உடையெல்லாம் நன்றாக நனைந்து தந்தம் போன்ற அவள் அங்கங்கள் காண் போரைக் கொல்லும் விதத்தில் அழகு சிந்திக்கொண்டிருந்தன. முழங்காலுக்குமேல் ஆடையை ஒரு கையால் பிடித்துக்கொண்டு கூடையைத் தலையில் கவிழ்த்தவாறு ஓட்டமும் நடையுமாக மழையைச் சமாளிக்கப் பார்த்தாள். அப்போது அவளுக்குப் பின்னே ஒரு வண்டிவரும் ஓசை கேட்கவே சாலையோரத்தில் ஒதுங்கி நின்றாள். வண்டி நின்றது. 4 பொன்மணி ! வண்டியில் ஏறிக்கொள்ளேன். அடடா! நன்றாக நனைஞ்சுட்டியே ...";-என்று அனுதாபத்துடன் கீழே இறங்கினான் கரகமாடிக் கண்ணன். பொன்மணிக்கு வெட்கம் தாங்கவில்லை. கூடையால் முகத் திலிருந்து இடுப்புவரையில் மறைத்துக்கொண்டு பேசாமல் நடந்தாள். - 66 கண்ணன் அவளைத் தொடர்ந்து, அடடா ! பைத்தியமா இருக்கியே சும்மா வண்டியிலே ஏறிக்க! நான் வேணும்னா கண்ணை மூடிக்கிறேன். நீயேன் வீணா கூடையைக் குடையா பிடிச்சுகிட்டு கஷ்டப் படுறே! என்றவாறு அவள் கையிலி ருந்த கூடையை வாங்கி, வண்டியில் வைத்துக்கொண்டு அவளையும் ஏறிக்கொள் என்ற ஜாடை செய்தான், கண்களை மூடிக் கொண்டதுபோல் பாசாங்கு செய்து! -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/70&oldid=1694957" இலிருந்து மீள்விக்கப்பட்டது