உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுருளிமலை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 மு. கருணாநிதி ? செய்வது; இனிமேல் "வராதே!" என்று தடுக்க முடியுமா சமாளித்துக் கொண்டாள் கற்பூரம். நன்றி தெரிவிக்குப் பாணி யில் தன் இருதயத்தைத் திறந்து காட்டி நாணம் குழைத்து கண்ணனிடம் பேசினாள். நான் நம்பவே இல்லை நீங்க சம்மதம் தருவீங்கண்ணு! ஆகா... "சம்மதம் " என்ற ஒரு வார்த்தைக்காக நான் எவ்வளவு தவி தவித்தேன் தெரியுமா? அவளது வார்த்தைகளைக் காதில் வாங்க அவனுக்கு நிதான மில்லை தன் விருப்பத்துக்குரியவளை வீட்டிலேயே சென்று பார்க்கக்கூடிய வாய்ப்பு வலுவிலே வந்திருக்கிறது. அதைத் தவறவிடாமல் உடனே செல்லவேண்டும் என்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தான். வீட்டுக்குள்ளே ஓடி, உடை மாற்றிக் கொண்டான். உடுக்கு எடுத்துக் கொண்டான். பொன் மணியின் வீடு நோக்கிப் புறப்பட்டு விட்டான். கற்பூரத்தோடு வரும் கண்ணனை சுருளிமலை வரவேற்று உள்ளே அழைத்துக் கொண்டு சென்றான். கண்ணன் வீட்டுக் குள்ளே தன் விழிகளை அலையவிட்டு பொன்மணியைத் தேடினான். அவள் எங்கேயோ மறைந்து கொண்டாள். அதில் கற்பூரத் திற்கு ஒரு திருப்தி! சிங்காரம் படுத்திருக்கும் இடத்திற்குக் கண்ணன் வந்தது தான் தாமதம்; எங்கிருந்து அந்தப் புதிய பலம் பெற்றானோ தெரியவில்லை; சிங்காரம் தூள் தூளாகக் கைக் கட்டுகளை அறுத் தெறிந்துவிட்டு ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்தான். ஆனால் கால் கட்டு அவனை மேலே விடவில்லை. "அடே துரோகி! இங்கே எங்க வந்தே? பேய் ஓட்டுவ வதற்கா? எனக்குப் பிடிச்ச பேயை உன்னால் ஓட்ட முடியுமா ? நீ என்ன பெரிய மந்திரவா மந்திரவாதியா? மாயா ஜாலக்காரனா ? மடையன் முட்டாள் நிற்காதே! ஓடிப்போ!! " என்று கத்த ஆரம்பித்தான் சிங்காரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/76&oldid=1694963" இலிருந்து மீள்விக்கப்பட்டது