உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுருளிமலை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 மு. கருணாநிதி அடுக்களையிலிருந்து வந்த கற்பூரம், கூடத்தில் பொன் மணியைக் காணாமல் சிறிது கலவரமடைந்து அண்ணனிடம் வந்து சேர்ந்தாள். அவனுடைய வீக்கங்களுக்கு அவளும் பூஞ்சோலையுமாகச் சேர்ந்து மஞ்சள் பத்து போடத் தொடங்கி னார்கள். உடலில் கை படுவதையும் சிங்காரத்தால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஒருவாறு பத்து போட்டு முடித்துவிட்டு பூஞ்சோலையம்மாள் பெருமூச்சு விட்டாள். கற்பூரம் தன் கைகளை நன்றாகக் கழுவிக்கொண்டு, சுற்று முற்றும் விழியோட்டி, பொன் மணியைத் தேடிப் பார்த்தாள். அவள் கிடைக்கவில்லை. பிறகு அவள் பூஞ்சோலையிடம் விடை பெற்றுக் கொண்டு வீட்டுக்குப் போய் ஆடுமாடுகளுக்குத் தீனியைக் கவனித்துவிட்டு வருவதாகப் புறப்பட்டாள். அவள் உள்ளத் திலே பெருங் குழப்பம்! தான் எண்ணியபடி ஏதாவது நடக்குமா? அல்லது எல்லாம் தலைகீழாக மாறிவிடுமா? இப்படி மனப் போராட்டம்! எவ்வளவு பெரிய சுமையை அவளாகத் தூக்கித் தலையிலே வைத்துக் கொண்டாள்; பாபம் ! - கண்ணன், பொன்மணியை மறக்கவேண்டும்; பொன்மணி தன் அண்ணனை மணக்கவேண்டும்; இந்த விளைவால் தனக்குக் கண்ணன் கிடைக்க வேண்டும் - இப்படிச் சிக்கலான ஏற்பாடு ஒன்றிற்காக அவள் தன் தலையை உடைத்துக்கொண்டாள். அவளையறியாமல் அவளுக்கு ஒரு நம்பிக்கை மட்டும் உதித்தது. அந்த நம்பிக்கை ஏற்பட்ட அற்பத் துணிவோடு அவள் வீடு நோக்கி நடை போட்டாள். எதிர்காலக் கனவுகளில் ஆழ்ந் திருந்த அவள், தன்னை கண்ணன் கவனித்துக்கொண்டு பூவரசு மரத்தடியில் நிற்பதைப் பார்க்கவில்லை. அவள் பார்க்காதவரைக்கும் நல்லது என எண்ணி, அவளைப் பின் தொடர்ந்து நடந்தான் அவன், கற்பூரம் வீட்டுக்குள் நுழை யும்போது தற்செயலாகத் தெருப் பக்கம் திரும்ப, கண்ணன் நிற்பதைப் பார்த்துவிட்டு ஆச்சரியத்தால் மெய் மறந்தாள். தேடியலைந்த செல்வம், செல்வம், வாசல் தேடி வந்து விட்டதாகத் தீர்மானித்துப் பூரிப்பு கொண்டாள், அவளால் பேச முடியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/82&oldid=1694970" இலிருந்து மீள்விக்கப்பட்டது