உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுருளிமலை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுருளிமலை 87 நின்று மீண்டும் துவங்கியது. முன்னைவிட பலமாக! எழுந்து அம்மாவிடம் சென்றாள். அதிக சப்தம் போட்டு எழுப்பினால், நோயாளியான அப்பா விழித்துக்கொண்டு விடியமட்டும் தொந் திரவு பொறுக்காமல் கஷ்டப்படுவாரே என்று சங்கடப்பட்டாள். ஈன சுரத்தில் “அம்மா!" என்றாள். அதற்குள் "பொன்மணி!” என்று சிங்காரம் மெல்ல அழைத்தான். அவளுக்குத் தூக்கி வாரிப்போட்டது. தண்ணீர் கேட்கத்தான் அவன் அழைக்கிறானா- அல்லது தவறான எண் ணத்தோடு அழைக்கிறானா ? அவளுக்கு நெஞ்சு படபடத்தது. மௌனமாகவே இருந்தாள். மறுபடியும் பொன்மணீ !" என அழைத்தான். அவள் பேசவில்லை. 'தயவு செய்து கிட்டவா தங்கச்சீ !" என்றான். அந்த அழைப்பில் அன்பு இழைந்தது. பரிதாபம் தலை காட்டியது. கெஞ்சுதல் மிஞ்சியிருந்தது. பொன்மணிக்கு அவளையறியாமல் ஒரு மன எழுச்சி ! தங்கச்சீ!" என்ற சொல்லில் பொதிந் திருக்கும் உறவையும் உண்மை அன்பையும் அவள் மதிக்கத் தவறவில்லை. 86 என்னாண்ணே வேண்டும்?" எனக் கேட்டபடி அருகே சென்றாள். 724 தங்கச்சீ ! என் நிலைமையை நீயாவது யோசிக்கப் பாரும்மா ! எனக்குப் பேயும் பிடிக்கலே ; மண்ணும் பிடிக்கலே ! எல்லாம் அக்கப்போர். என் தங்கை கற்பூரத்திற்கு வர்ர ஆவே சத்தினால் வந்த வினை இதெல்லாம். என்னைத் தப்பா நினைக் காதே- இதுதான் இதுதான் சமயம் கட்டுக்களையெல்லாம் அவிழ்த்து விட்டுட்டு கதவையும் திறந்து விடு. முதல்ல கொஞ்சம் தண்ணி கொடு !" நான் ஓடிப்போறேன். சிங்காரத்தின் வேண்டுகோளில் இருந்த பரிவைக் கண்டு மனமுருகினாள் அவள். தண்ணீர் கொண்டுவந்து தந்தாள். அதைக் குடித்த சிங்காரம் " ஒரு திரான் சாராயம் அகப்பட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/89&oldid=1694977" இலிருந்து மீள்விக்கப்பட்டது