உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுருளிமலை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுருளிமலை 89 தெருக்கதவு திறக்கப்பட்டது சிங்காரம் நன்றியோடு பொன்மணியைப் பார்த்து விடடு வீட்டை விட்டு வெளியேறி னான். பொன்மணி, கதவைத் தாளிட்டுவிட்டு தன் இடத்திற்கு வந்து படுத்தாள். அவள் சப்தம் ! 86 படுப்பதற்குள் தெருப்பக்கத்தில் பயங்கரமாண அய்யோ!" என்ற பெருங்கூச்சல்! பொன்மணி என்று அவளையுமறியாமல் அலறியபடி ! திடுக்கிட்டெழுந்தாள் ; அம்மா! அப்பா! பூஞ்சோலை, பொன்னையா - இருவரும் விழித்துக்கொண் டார்கள். பொன்மணி, ஓடிபோய்த் தெருக் கதவைத் திறந்தாள்! 1 அவள் வீட்டுக்கு எதிரே ஒரு முரட்டுக் காளை அதன் கொம்புகளுக்கு நேரே ஒரு ஆள்! அந்த ஆள் தெருவிலே கிடந்தான்! அவனை சரியாக அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை! பந்துபோல் உருண்டு கிடந்த அவனிடமிருந்து இப்போது ஒளியவில்லை! காளை மட்டும் மூர்க்கமாக அவணை முட்டித்தள்ளி தெருவில் உருட்டிக்கொண்டே யிருந்தது! 12 பொன்மணி, பூஞ்சோலை இருவரும் போட்ட கூச்சலின் தூரத்திலேயுள்ள வீடுகளிலே இருந்து ஒரு சிலர் விளக்குகளு டன் ஓடிவந்தனர். அப்போதுதான் வீட்டை விட்டு வெளி யேறிய தீச்சட்டி சிங்காரம் சப்தத்தைக் கேட்டுப் பதைப்போடு திரும்பினான். என்றாலும் ஒரு மரத்தடியில் ஒளிந்து நடப்பதைக் கவனித்தான். ஏனெனில் ஒரு வேளை தான் ஓடிவந்ததைத் தான் பூஞ்சோலை தெரிந்துகொண்டு கத்துகிறாளோ என்ற அச் சம் அவனுக்கு. திரும்பி வந்து மீண்டும் அவர்களிடையே சிக்கிக்கொண்டு அவஸ்தைப்பட அவன் தயாராயில்லை. அதற்குள் பக்கத்துத் தெருவினர் வீட்டு முன்னே கூடிவிட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/91&oldid=1694979" இலிருந்து மீள்விக்கப்பட்டது