116 房翰型醇
சென்ட் லிப்ஸ்டிக்..."
வாசனை தெளித்துக் கொள்! உதட்டுச் சாயம் வேண்டாம். ஏற்கெனவே செர்ரிப்பழம் போல மின்னும் உன் உதடுகளுக்குச் சாயம் வேண்டியதில்லை."
"எல்லாம் சரி! நீயோ எதையும் வெளிப்படையாக விட்டுப் பேசிக் கொள்ள வில்லை என்கிருய். சந்திக்க மட்டும் ஏற்பாடு பண்ணியிருப்பதாகச் சொல்கிருய்! அவரிடம் நான் எப்படியடி ஆரம்பிப்பேன்? எப்படி மயக்கி எப்படி வசப்படுத்தி எப்படி..?"
"செக் புத்தகம் கொண்டு போ! திவ்ய சேவாசிரமத்தின் சேவைகளைப் பற்றி நாலு நல்ல வார்த்தை சொல்லு. குப்பைய ரெட்டி மாதிரி எவனே ஒருத்தன் டன் வாழ்வைப் பாழாக்கி விட்டான் என்பதைச் சொல்லு... உங்கள் உபதேசம்தான் என்னைக் கைதுக்கிவிடும் என்று சொல். அழு. கால்களைத் தொட்டு வணங்கு-மன்ருடு மெல்ல மெல்ல வசப்படலாம்.'
"நான் நிர்ப்பலமாக உணர்கிறேன்." "இந்த நிர்ப்பலமே உன் பலம் சுலபா! நீ ஒரு செளந்தரி யப் படையெடுப்பு நடத்தப் போவது புரியாமல் இப்படிப் பேசாதே."
பயமாயிருக்கிறதடி.'
"நீ ஒன்றும் பச்சைக் குழந்தையில்லை. முதலிரவுக்குப் போகிற பேதைக் கன்னிப் பெண்ணுமில்லை, பலரை நொடியில் வென்ற வெற்றியரசி என்பதை நினைத்துக் கொள்!"
"இதுவரை நான் ஆண்களை வென்றிருப்பது உண்மை!
ஆனல் என் தாபங்கள் தீர வேணுமால்ை நான் இங்கே தோற்க வேண்டுமேடி கோகிலா!'
"கவலைப் படாதே எந்தப் பஞ்சும் நெருப்பில் எரியும் சுலபா!' . -
"இதில் யார் நெருப்பு? யார் பஞ்சு?"