பக்கம்:சுலபா.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 சுலபr

தெரிந்த விளக்குகள் மின்னும் ஓர் நீண்ட கட்டிடத்தைக் காட்டி, அதுதான் வழுக்கி விழுந்த பெண்கள் மறுவாழ்வு விடுதி பக்கத்தில் தெரிவது அவர்களுக்குப் பல்வேறு தொழில் களைக் கற்பிக்கும் பயிற்சி நிலையம். எதிரே தெரிவது திவ்யா னந்தர் தங்கும் குடில்’’-என்று மெல்லிய குரலில் சொன் ளுன் கோகிலா. அதில் மின் விளக்கு இல்லை. அகல் விளக்கின் ஒளியில் அமர்ந்து தியானத்தில் இருந்த திவ்யானந்தர் காலடி ஓசை கேட்டுக் கண் திறந்தார். இளஞ்சூரியனைப் போல் அழகாயிருந்தார் திவ்யானந்தர். திருப்பதியில் கர்ப்பக் கிருகத்தில் உணர முடிந்த அதே சந்தனம் கருப்பூாம் இணைந்த நறுமணம் நிலவியது குடிலில். இருவரும் வணங்கினர்கள். கோகிலா சொன்னாள். "சுவாமி! நான் அன்னிக்கு வந்து சொன்னேனே என் சிநேகிதி...அது இவதான்! உங்க புத்தி மதிதான் இவளுக்குப் புதுவாழ்வு காண்பிக்கணும்-'

சுலபா மீண்டும் அவரை வணங்கினுள். 'உங்கள் உபதேசம் இவளை நல்வழிக்குக் கொண்டு வரும்னு நம்பிக்கை யோடப் போறேன் சுவாமி காலையில் வருகிறேன்-என்று கோகிலா புறப்பட்டு விட்டாள். உபசாரத்துக்காகக் கூட திவ்யானந்தர் நீயும் இரே ைஎன்று கோகிலாவைக் கேட்க விலலை. சுலபா அப்படியே கட்டுண்டு உட்கார்ந்திருந்தாள். கீழே கார் ஸ்டார்ட் ஆகித் திரும்புகிற ஓசை கேட்டது. கோகிலா புறப்பட்டுவிட்டாள்.

எதிரே மாயக் கண்ணனே துறவியாக அமர்ந்திருப்பது போல் ஒரு தேஜஸ். ஒரு காந்தி, ஒரு தெய்வீகப் புன்னகை. "உன் மனசில் இருப்பதை ஒளிக்காமல் சொல்லம்மா?" சுலபாவுக்கு முதலில் பேசவரவில்லை, பொய்யும் சொல்ல வரவில்லை! நிஜம் பேசவும் முடியவில்லை.

  • உன்னைப் பார்க்கும்போது சாட்சாத் சரஸ்வதியே மனக் கஷ்டத்தோடு என் எதிரே வந்து உகோர்ந்திருப்பது போல் தோன்றுகிறது." •,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/122&oldid=565790" இலிருந்து மீள்விக்கப்பட்டது