பக்கம்:சுலபா.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 பாசிகவி

கனகாபிஷேகம் செய்துவிட வேண்டும் போலிருந்தது. கோல்டு கண்ட்ரோல் ஆக்ட்-தங்க விலை ஏற்றம் எல்லாம் தடுத்திரா விட்டால் அதைச் செய்தே இருப்பார்.

"தனியாப் போகப்படாதாம்! தம்பதி சமேதராப் போகணும்னு ஜோசியர் சொல்ருரு."

'பலே! ஹனி முன் மூன்-ஆதாவது ஸ்ெகண்ட் "ஹனி மூன்’ மாதிரிப் போயிட்டு வாங்க....'

"எனக்கு மனசே இல்லே! ஆனா எதையுமே வற்புறுத் தாத ஜோசியர் இதை வற்புறுத்தறாரு. இங்கே என்ன டிான்ன திருப்பதி மொட்டை மாதிரி எல்லாமே பாதியிலே நிக்கிது. இந்தப் பிஸினஸ் வையத்தியரை வேறு வரவழைச் சிட்டோம். ஆன ஜோசியர் நான் திரும்பி வரப்போ எல்லாமே அமோகமா இருக்கும்.கிருரு.'

"ஒண்ணும் கவலைப் படாதீங்க; இந்தக் குப்தாவை நான் பார்த்துக்கிறேன். நீங்க திரும்பி வரப்போ ஒட்டில் பார்கவி புதுச இருக்கும். அபார லாபத்திலே நடிக்கும்.' .

"அதுதான் எப்டீன்னு புரியலே. எள் புள்ளைங்க ரெண்டுமே தறுதலை, ஆச்சி என்கூடி வந்துடுது. நீங்களும் பார்கவியுமாய்ப் பார்த்து எதினாச்சும் பண்ணினாத்தான் உண்டு." - -

'ஒட்டில், மத்ததுலே ஏதாவது சேஞ்சேஸ் பண்ணணும்னு உங்க கையெழுத்தைத் தேடி அலையனும், அதுளுல் பார்கவி பேருக்குப் "பவர் ஆஃப் அட்டர்னி' குடுத்துட்டுப் போயிடுங்க! நாங்க அவசியமானதைப் பண்ணிக்கிறோம்."

'பார்கவிக்குக் குடுக்கலாமா? அல்லது கரும்பாயிரம் பயல் விசுவாசமானவன், மானேஜர்ங்கிற முறையிலே அவனுக்கு டெம்பரவரியாப் பவர் குடுத்து எழுதித் தந்திட்டுப் போகட் டுமா?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/184&oldid=565852" இலிருந்து மீள்விக்கப்பட்டது