பக்கம்:சுலபா.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 பார்கவி

வேண்டாம்! ஒரல் எக்ரிமெண்ட் போதும். நான் உங்களை நம்பறேன். ஜெண்டில்மேன் எக்ரிமெண்ட்டை நம்பற மாதிரி நான் பத்திரத்தைக் கூட நம்பறதில்லே...'

குப்தா ரொம்பப் பெரிய மனிதனுக அவர்களுக்குத் தோற்ற மளித்தான். பிராப்ளத்தைக் கண்டுபிடித்து, சிகிச்சை முறை யையும் மருந்துகளையும் கூறிவிட்டுத் தன் ஃபீஸுக்காகக் கையை நீட்டும் பிஸினஸ் டாக்டராக மட்டும் அவன் இல்லை. அவனுக்கு மனிதாபிமானம் இருப்பது தெரிந்தது.

புதிய திட்டத்தை நிறைவேற்ற ஒரு கால எல்லையை அதிகபட்ச லிமிட் என்று அறுபது நாள் போட்டுக் கொடுத் தான் குப்தா. அவ்வளவு நாட்கள் தான் குருபுரத்திலேயே இருக்க முடியாது என்றும் தனக்கு வேறு நோய்வாய்ப்பட்ட தொழில்களிலிருந்தும் அவசர அழைப்பு இருக்கிறது என்றும் இரண்டு மூன்று முறை பம்பாய், அஹமதாபாத், கான்பூர் என்று நடுநடுவே போய்விட்டு வந்தான் குப்தா.மைத்துனனிடி மிருந்து பணத்தை வரவழைத்துக் கொடுத்து மாறுதல்கள் வளர்ச்சிக்கான ப்ளு பிரிண்ட்டையும் கையில் தந்து டைம் ஷெட்யூலையும் அளித்து ஆடிட்டர் சிவவடிவேலுவின் மகன்களை வேலையில் ஈடுபடுத்தின்ை குப்தா.

இதன் நடுவே திடீரென்று ஒரு நாள் சென்னையிலுள்ள மாதவி டுர்ஸ் அண்ட் டிராவல்ஸிலிருந்து ஆடிட்டர் அனந், துக்கு ஒரு ஃபோன் வந்தது. சிவவடிவேலு தம்பதிகள் செளக்கியமாக இருப்பதாகத் தகவல் சொல்லிவிட்டு யாரோ கரும்பாயிரம்னு ஒரு ஆள் உங்க ஊரிலே இருந்து வந்து ஒரு லெட்டரைக் கொடுத்து, இது ரொம்ப முக்கியம். இதை உடனே முதலாளிக்கு அனுப்புங்கன்னு வற்புறுத்தருரு என்ன செய்யறது? இதை அனுப்பலாம் என்ருல் நியூயார்க் அல்லது லண்டனில் எங்களுக்கு ஒரு காண்டாக்ட் அட்ரஸ் இருக்கு: அங்கே அனுப்பி மிஸ்டர் சிவவடிவேலுவிடம் கொடுக்கச் சொல்ல முடியும்! என்ன சொல்றீங்களோ அப்படியே செய்யலாம்,' என்ருச்கள். お ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/198&oldid=565866" இலிருந்து மீள்விக்கப்பட்டது