பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

23


“அந்த ‘ஹார்மனி’ நீங்க வெறும் பூச்சியா, மீெஷினா உழைக்கிறதிலதான் இருக்குன்னா, அது கேவலம். எல்லா சுரங்களும் ஒத்து இணைஞ்சாத்தான் ‘ஹார்மனி’ங்கற அம்சம் வரும். ஒரே பார்வையில் ‘ஹார்மனி’ கிடையாது!”

ஒரே போடாகப் போட்டு விட்டு ரத்னா எழுந்து செல்கிறாள்.


3


பகல் மூன்றடிக்கப் போகிறது. மாவரைக்கும் கிரைண்டர் பழுதாகிக் கிடக்கிறது. ‘எலெக்ட்ரிஷிய’னுக்கு நேரில் போய்ச் சொல்லிக் கூப்பிட்டு வரவேண்டும். நேரமில்லை.

அடுப்பில் எண்ணெய்ச் சட்டியை வைத்து, தேன் குழல் பிழிந்து கொண்டிருக்கிறாள் கிரி. ரத்னா சற்றே படுத்து எழுந்து முற்றத்துத் துணிகளை எடுத்து மடிக்கிறாள். ரோஜா மாமி வருகிறாள் போலிருக்கிறது. இலேசான வெளிநாட்டு ‘சென்ட்’ மணம் காற்றில் தவழ்ந்து வருகிறது.

சமையலறையிலிருந்து வெளிப்பட்டு, கிரி சாப்பாட்டுக் கூடம் கடந்து மொட்டை மாடிக்குச் செல்லும் வாயிலில் நின்ற படியே பார்க்கிறாள். அங்கிருந்து பார்த்தால் மாமியார் அறை தெரியும். மருதோன்றிச் சிவப்பில் பட்டுச் சேலை தெரிகிறது. இவள் மட்டும் வந்தால் நேராக மாமியாரின் அறைக்குப்போய் விடுவாள். பிரதான வாசலில் வந்து மணியடிக்கும் சமாசாரம் கிடையாது. அந்த அறைக்கு மாடிப்படியில் இருந்து நேராகப் போய்விடலாம்.

“இப்ப மூணு நா சேர்ந்தாப் போல லீவா இருந்தது. போக முடியல, எங்கும். யாராரோ வெளிலேந்து வந்திருக்