உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

சுவடி இயல்

பெயர்ப்புகள், மேற்கோள் நூல்கள். உரை நூல்கள், அகராதிகள்

ஆகியவை துணைக் கருவிகளாகும். இக்கருவிகளுடன் பதிப்புப் பணியைத் தொடங்கலாம். தேர்ந்தெடுக்கப்பெற்ற மூலச் சுவடியை வைத்துத் தூய படியினைத் தயாரிப்பது முதற்பணியா கிறது. பிற சுவடிகளின் துணைகொண்டு முறையாகப் பாட வேறுபாடுகளைக் குறித்துக் கொள்ளுவது இரண்டாவது யாகும். மூன்றாவதாகப் பதிப்பு ஆய்வுப்பணி மேற்கொள்ளப் பெறும்.

அ. முதற்பணி - படியெடுத்தல்

பணி

படியெடுத்தலில் ஏற்படும் சிக்கல்கள் : சுவடிகளில் பாடல், உள்தலைப்பு, உரை, விளக்கம், பாடல்எண், சுருக்கக் குறியீடுகள், திணை தி துறை விளக்கம், இலக்கணக் குறிப்பு, மேற்கோள் ஒப்புமைப் பகுதி, பாடவேறுபாடு, அவ்வேறுபாட்டு விளக்கம், பிற உரையாசிரியர் கருத்து, அதற்கான மறுப்பு ஆகியவை ஒன்றற் கொன்று பிரித்து அறிய இயலாதவாறு தொடர்ந்து எழுதப் பெற் றிருப்பது முதல் சிக்கல். புள்ளியின்மை, கொம்பு, கால், ரகரம் இவற்றில் வேறுபாடின்மை, சில எழுத்துகளின் வடிவ வேறுபாடு, கையெழுத்துத் தெளிவின்மை ஆகிய குழப்பங்கள் இரண்டாவது சிக்கல்.

ஆ. சிக்கல் நீக்கும் வழி

சுவடிகளில் காணும் இச் சிக்கல்கள் முதன்முதலில் சுவடிப் பதிப்பில் ஈடுபட்டவர்களுக்குப் பெருந்துன்பத்தை அளித்தன. இச்சிக்கல்களை அறுத்து உண்மைத் தொடர்களை அறியப் பெரும் பாடுபட்டனர். ஆழ்ந்த நூலறிவும், நினைவாற்றலும், பதிப்பில் ஊக்கமும், அதற்கேற்ற உழைப்பும் உடைய ஒரு சிலரே சிறந்த பதிப்புகளை உருவாக்கி வெற்றி பெற்றனர். ஆனால் இக்காலத்தில் பதிப்புக்கலை முன்னோடிகளின் அனுபவங்கள் துணை நிற்கின்றன. துணைக் கருவிகளும் பலவாகக் கிடைக்கின்றன. அவற்றின் துணை யால் இச்சிக்கல்களை எளிமையாக நீக்கிக் கொள்ளலாம். பாட வேறுபாடுகள், மூலபாட ஆய்வு ஆகிய இயல்களில் கூறப்பெற்ற செய்திகள் முன்னோடிகளின் அனுபவங்களை அளிக்கின்றன. சுவடி களில் காணப்பெறும் எழுத்து முறைகள், பாட்டு அமைப்புகள் ஆகியவற்றில் பயிற்சி பெறுவது குழப்பங்களிலிருந்து விடுபடத் துணைபுரியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/206&oldid=1571290" இலிருந்து மீள்விக்கப்பட்டது