பக்கம்:சுவரும் சுண்ணாம்பும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீக்கனாக் கண்டால், சிற்றின்பம் நுகர்ந்தால், உருட்டி உருட்டிநாம் உண்ணும் உணவை வாந்தி எடுத்தால், மயிர்களைந்து கொண்டால்: நெடும்பொழு துறங்கினால் நீராட வேண்டும் என்கிறார் பெருவாயின் முள்ளியார்

போலிச் சடங்கையும், புராணப் புரட்டையும், மெளடீக சாதி மதத்தையும் எதிர்த்துப் போராட வேண்டுமே யன்றிநாம் போய்ப்போய்ச் சேறாடும் குளத்தில் நீராட வேண்டுமா? என்று கேட்கிறார் ஈரோட்டுப் பெரியார்.

நீரிலே பிறந்து நீரிலே வாழும் மீனினம் நீராட வேண்டுவ தில்லை.