பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெட்டெழுத்து ஒவ்வொரு மெய்யெழுத்து கூடி இரண்டெழுத்தாக நின்று, - ஆ-ஆன்: மாடு ஈ-ஈன்: பெற்றெடு ஊ-ஊன்: இறைச்சி ஏ-ஏன்: வினாப்பொருள் இவ்வாறாக ஈரெழுத்தொருமொழிகள் பெருகின. பின் மேலும் எழுத்துக் கள் கூடிச் சொற்கள் பெருகின. தமிழ்ச் சொல்லின் வளம் பற்றி முன்னர் மொழி வரலாற் றின் சின்னமாக விளக்கப்பட்டது கொண்டு உணரலாம். அது ஒரு சோற்றுப் பதம். உலகின் தென் மொழி ஒவ்வொன்றும் தன் தனக்கென ஒவ்வொரு மூலம் கொண்டது. அதனதன் சொல் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மூலவேர் கொண் டது. அதனை 'வேர்ச்சொல்' என்கின்றோம். வேரில் ஆணிவேர் உண்டு; சல்லி வேர்கள் உள்ளன. ஆணி வேர்க் கும் மூல வேர் முனை உண்டு. இதனை 'வேரடிச்சொல் எனலாம். 'வேர் என்பது செடிமச்சொல். இதன் தொடர்பில் சொல்லின் வளர்ச்சியையும் வேரடிச்சொல் - வேர்ச்சொல் - (விதைச்சொல் - கருச்சொல்) முளைச்சொல் (முதனிலை) - தளிர்ச்சொல் (ஒரெழுத்தொருமொழி) இலைச்சொல் வளர்மொழி) - தழைச்சொல் (பொருள் செறிந்த மொழி) கிளைச்சொல் (பொருள் கிளைப்பது) அரும்புச்சொல் (நுண்பொருள்) - மலர்ச்சொல் (விரிபொருள்) காய்ச்சொல் (வன்சொல்) - கனிச்சொல் (இன்சொல்) எனவெல்லாம் குறிக்கலாம். 6. சொல்லின் பெயர் சொல் குறிக்கும் பலவற்றில் உயர்திணை, அஃறிணை எனும் இரண்டும் சிறப்பாகக் குறிக்கப்பட்டன. 102.