பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி - சூடாமணி செய்யுள்-62 க. சொ. ஆக்கத்திற்குரியவை: மழையலர், நீரம், அறல், வார். ஆம், அம், கம், சிந்து, அம்பு, அப்பு. வடசொற்கள்: புவனம், நாரம், கனவிரதம், கவந்தம், சீவனம், வனம், பயசு, சம்பரம், பானியம், சிவனியம், தீர்த்தம், கீரம், சிதம், மணிப்பவளச் சொற்கள் : அயம், அளகம், சலம். ஞாயிறு பரிதிபாற்கரனாதித்தன் பனிப்பகைசுடர்பதங்கன் இருள்வலிசவிதாச்சூரனெல்லுமார்த்தாண்டனென்று ழ்' அருணனாதவனேமித்திரனாயிரஞ்சோதியுள்ளோன் தரணிசெங்கதிரோன்சண்டன்தபனனேயொளியேசான்றோன் 63 பரிதி,பாற் கரன்,ஆ தித்தன், பனிப்பகை, சுடர்,ப தங்கன் இருள்வலி, சவிதா,ச் சூரன், - எல்லும்ார்த் தாண்டன், என்று ழ், அருணன்;ஆ தவனே மித்திரன், . . . . . ஆயிரஞ் சோதி யுள்ளோன், தரணி,செங் கதிரோன், சண்டன், தபனனே ஒளியே சான்றோன். பெ. பொ. விளக்கம்: சூரியன் - (சுள்-வேர்ச்சொல்) சுள்ளென்று வெப்பத்தை முதலில் தந்தவன் பரிதி-வட்ட வடிவமுள்ளவன் பாற்கரன்-ஒளிக்கதிருடையவன் ஆதித்தன்-முதலில் தோன்றியவன். பனிப்பகை-பனியைப்போக்கும். பகைவன் 139.