பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்-99 முகில் (மேகம்) பயனுறுமங்குல் சீதம்பயோதரந்தாராதாரம் குயின் மழையெழிலிமஞ்சுகொண்டல்சீமூதங்கொண்மூ வியன்முகில்விண்விசும்புவிளையுமால்சலதரஞ்செல் புயல்கனங்கந்தரங்கார்போற்றுமைமாரிமேகம் 99 பயனுறு மங்குல், சிதம் பயோதரம், தாராதாரம் குயின் மழை, எழிலி, மஞ்சு கொண்டல், சீமூதம், கொண்மு வியன்முகில், விண்,வி சும்பு விளையும்மால், சலதரம், செல் புயல்,கனம் கந்த ரம்,கார் போற்றுமை, மாரி, மேகம் பெ. பெ. விளக்கம் மேகம்-நீரால் நிலத்தை நனைப்பது மங்குல்-தன் கருமையால் ஒளி மங்க வைப்பது சிதம்-குளிர்ச்சி உடையது பயோதரம்-நீரைத் தரித்திருப்பது தாராதாரம்-தாரைகளைத் தரித்திருப்பது குயின்-கருநிறமுடையது மழை-மழையைத் தருவது எழிலி-எழுச்சியுடையது மஞ்சு-கருத்த தொகுதியானது கொண்டல்-நீரைக்கொண்டு கிழக்கே தோன்றுவது சீமுதம்-கட்டப்பட்டிருப்பது கொண்மூ-நீரைக்கொண்டு முதிர்ந்தது முகில்- நீரைப்பெய்ய முகிழ்த்துள்ளது விசும்பு-வானத்தில் உள்ளது மால்-கருத்து மயங்கவைப்பது சலதரம்-நீரைத்தரித்திருப்பது xx செல்-வானச்செலவை உடையது, துன்பந்தருவது စ္ဆက္တို႔