பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி தேவப்பெயர்த் செtiயுள்-134 தையற்காரர், தோல்தைப்பவர் கிணற்றுநூலவர், சங்குஅறுப்போர் இறைச்சி விற்பவர், தோவில் தொழில் செய்பவர் பொல்லரேதுன்னரென்பபுகன்றதோற்றுன்னர்செம் மார். உல்லியர்கூவனூலோரொளிவளைபோழ்நர்தாமே மெல்லியசங்கறுப்போர் ஆனருன்விற்போரென்ப சொல்லியபறம்பர்தாமேதோல்வினைமாக்கணாமம் 134 பொல்லரே துன்னர் என்ப புகன்றதோல் துன்னர் செம்மார் உல்லியர் கூவல் நூலோர் ஒளிவளை போழ்நர் தாமே மெல்லிய சங்க றுப்போர் சூனர்ஊன் விற்போர் என்ப சொல்லிய பறம்பர் தாமே தோல்வினை மாக்கள். நாமம் பெ. பொ. விளக்கம் துன்னர்-தைக்கும் தொழில் செய்பவர் பொல்லர்-துணியைப் பொருத்தித் தைப்பவர் தோல்துன்னர்-தோலில் தைப்பவர் செம்மார்-தோலைச் செம்மைப்படுத்தித் தொழில் செய்பவர் கூவனுலோர்-கிணறு பற்றிய நூலறிவு உடையவர் உல்லியர்-கிணறு குறிப்போர் சங்கறுப்பேசர் வளை போழ்நர்-சங்கை அறுத்துப் பிளப்பவர் ஊன்-இறைச்சி சூனர்-கொலைத்தொழில் உடையவர் தோல்வினைமாக்கள்-தோலைப்பதப்படுத்துவோர் பறம்பர்-தோல் பிசிர் நீக்கிப் பதம் செய்வோர் - 320