பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/513

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி . சூடாமணி திண்ணியன் தானைத்தலைவர் வயவனே திறலோன்மற்றைவண்டினேமிண்டன்மள்ளன் வியவனேவிறலோன் மீளிவீரனே திண்ணியன்பேர் - நயமில்கூளியரேறாளர்நாட்டும்வாருழவர்கள்ளர் > சயமிகுமறவ ர்தானைத்தலைவராம்படருமாமே 151 வயவனே திறலோன் மற்றை லண்டனே மிண்டன், மள்ளன் வியவனே விறலோன், விரனே திண்ணி யன்பேர் நயம்இல்கூ ளியர் ஏறாளர் நாட்டும்வாள் உழவர், மள்ளர் சயமிகு மறவர் தானைத் தலைவராம் படரும் ஆமே பெ. பொ. விளக்கம்: திண்ணியன்-உறுதி உடையவன் வயவன்-வலிமை உடையவன் வண்டன்-உடலால் திறமையுள்ளவன் மிண்டன்-மிண்டுதல் உடையவன் - மள்ளன்-மண்டும் வலியவன் வியவன்-ஏவல் உடையவன் விறலோன்-வெற்றிபெறும் வலிமையன் மீளி-எந்த இடரினின்றும் மீளும் வல்லமை உடையவன் தானைத்தலைவர்-தார் தாங்கிச் செல்வோரின் தலைவர் கூளியர்-அஞ்சாது தாக்குபவர் ஏறாளர்-காளை போன்ற வலிமையை ஆள்பவர் வாள் உழவர்-வாட்படையை ஏராகக்கொண்டு களப்போரில் உழுபவர் மறவர்-போர் வலிமை உடையவர் - - படர்-போரில் கொல்லும் தொழிலினர் 363