பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/566

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி மக்கட் பெயர்த் செய்யுள்-173 நெய்தல் மாக்கள் நெய்தல் பெண் பரதவர் துளையரோடுபஃறியர் திமிலர்சாலர் கருதிய கடலர்கோலக்கழியரேநெய்தன்மாக்கள் விரவியபரத்திமேவுநுளைச்சியேயளத்திநீண்டு பெருகியகடற்பிணாவேநெய்தலிற்பெண்ணினாமம். 173 பரதவர், நுளைய ரோடு பஃறியர், திமிலர், சாலர் கருதிய கடலர், கோலக் கழியரே நெய்தல் மாக்கள் விரவிய பரத்தி, மேவு துளைச்சியே அளத்தி, நீண்டு பெருகிய கடற்பி னாவே நெய்தலின் பெண்ணின் நாமம். பெயர்ப் பொருள் விளக்கம்: பரதவர்-பரவிக்கிடக்கும் கடற்பகுதியினர் நுளையர்-கடற்கழிமுகப்பகுதியில் வாழ்வோர் பஃறியர், திமிலர்-தோணியில் தொழில் செய்பவர் சாலர்-வலை வீசுபவர் - கடலர்-கடலில் தொழில் செய்து வாழ்பவர் கழியர்-கழிநிலத்தில் திரிவோர் பரத்தி-பரதவப் பெண் நுளைச்சி-பரதவப்பெண் அளத்தி-அளமான நிலத்தில் உப்பமைப்பவள் கடல்பினா-கடற்கரையில் வாழும் பெண் கருதிய-தொழில் செய்யக் கருதும் கோலம்-அழகிய நீண்டு, பெருகிய (கடல் என)-கடலுக்கு அடைமொழிகள்