பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/605

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்-189 தொடை அல்குல், இடை மருங்கின் பக்கம் நெடியவூருக்குறங்குநீள்வாமங்கவான்றொடைப்பேர் கடிதட நிதம்பமென் பகவின்றிகழல்குலின்பேர் நடுநுகப்பொடுமருங்குநாட்டுமத்திமமேயுக்கம் இடையின்பேர்மருங்கின்பக்கம்மொக்கலையென்பதாமே 189 நெடிய ஊருக்கு றங்கு நீள்வாமம், கான்,தொ டைப்பேர்; கடிதடம், நிதம்பம் என்ப கவின் திகழ் அல்கு லின்பேர், நடுநுசுப் பொடும ருங்கு, நாட்டுமத் திமமே உக்கம் இடையின்பேர், மருங்கின் பக்கம் ஒக்கலை என்ப தாமே பெயர்ப் பொருள் விளக்கம்: தொடை-இடையையும் காலையும் தொடுப்பது ஊரு-ஆடையால் முடப்படுவது குறங்கு-கீழ்ப்பக்கமாக குறுகுவதை உடையது வாமம்-அழகுடையது - கவான்-கவையாகி நீண்டது அல்குல்-அல்கி கூராகக் குறைந்து மடிப்பானது கடிதடம்-அழகியதாய் அகலமானது நிதம்பம்-மெலிதலை உடையது இடை-நடு, மத்திமம்-உடலின் இடையில் உள்ளது நுசுப்பு-மெலிந்து விளைவது மருங்கு-மருவுதற்கு இருபுறமானது * உக்கம்.-'உ' என்னும் சுட்டடியாக இடைப்பகுதியானது ஒக்கலை-அனைத்துத் தழுவலை கொள்வது }