பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/632

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி - மக்கட் பெயர்த் செய்யுள்-199 தலை, குடுமி, உச்சி உரவியதலையேமூர்த்தமுவ்வியோடுத்தமாங்கம் சிரமுடிசென்னிமுண்டஞ்சிகரமத்தகமுமாகும் திருமுடிசிமிலிசிக்கஞ்சிகையிவைகுடுமிநாற்பேர் விரவியகடிகைதுழிமேவியநவிரமுச்சி 199 உரவிய தலையே மூர்த்தம் உவ்வியோ டுத்த மாங்கம் சிரம்,முடி, சென்னி, முண்டம் சிகரம், மத்தகமும் ஆகும்; திருமுடி, சிமிலி, சிக்கம் சிகைஇவை குடுமி நாற்பேர்; விரவிய சுடிகை, சூழி, மேவிய நவிரம் உச்சி. பெயர்ப் பொருள் விளக்கம்: தலை-முதலில் தோன்றுவது முர்த்தம்-உருவத்தின் மேம்பட்டது உவ்வி-உயர்வானது உத்தமாங்கம்-சிறந்த உறுப்பு சிரம்-நரையால் பீடிக்கப்பெறுவது முடி-உடலின் மேலே முடிவாக உள்ளது சென்னி-முகில்போல் மேலானது முண்டம்-மயிர் களையப்படுவது சிகரம்-உடலின் மேல் உச்சி மத்தகம்-திரட்சி உடையது குடுமி-உயர்ந்த இடமாகிய தலையில் கூட்டப்பெறுவது முடி-தலையின்மேல் முடிவாக உள்ளது - சிமிலி-உச்சி சிக்கம்-சிக்கல் ஆவது சிகை-சீய்க்கப்படுவது 482.