பக்கம்:சூரப்புலி.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 14 மடைந்தார். சூரப்புலியும் தன்ண்பறியாது இவற்றில் வசப்பட்டு உயர்ந்த மன நிலையை அடைந்து கொண்டேயிருந்தது. சூரப் புலியைப் பக்குவப்படுத்தக் கருதியே துறவி இந்த யாத்திரையை மேற்கொண்டதுபோலத் தோன்றிற்று. வடகிழக்குப் பகுதியிலே கெளரிகுண்டமிருக்கிறது. அது பெரும்பாலும் உறைபனிப்படலத்தால் மூடிக் கிடக்கும். ஆல்ை,துறவி அதை அணுகியபோது அதிலே பனித்துண்டுகள்தாம் அங்குமிங்கும் மிதந்தன. துறவி அதில் நீராடினர். சூரப்புலியும் குளித்தது. பனிக் கட்டியைக் போலக் குளிர்ந்திருந்த அந்தத் தண்ணீரில் முழுகியவுடன் ஒரு புதிய பிறவி கிடைத்ததுபோலச் சூறப்புலிக்கு உணர்ச்சி எற்பட்டது. கெளரி குண்டத்தில் உற்பத்தியாகி இரண்டு நதிகள் கபிலாய கிரியைச் சுற்றி வட்டமிட்டுச் சென்று, பிறகு ஒன்றுகூடுகின்றன. அந்த நதிகளின் அருகிலேயே பிரதட்சிணம் செய்யும் வழியும் அமைந்திருக்கிறது. சில இடங்களிலே பெருங்காற்று வீசிற்று. சில இடங்களிலே ஆலங்கட்டி மழை பெய்தது. அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் துறவி நடந்தார். சூரப்புலிக்குத் தன்னப்பற்றிய நினைவேயில்லே. தனது குருநாதனுகிய துறவியைப்பற்றி நினத்துக் கொண்டே அது நடந்தது. அவர் ஒம் ஓம் என்று முழங்கும்போது சூரப்புலியின் கண்களிலே ஓர் அசாதாரணமான ஒளி பிறக்கும். ஏதோ தெய்வலோகத்தில் இருப்பதுபோல அதற்கு உணர்ச்சி ஏற்படும். நரன்கு நாட்கள் பிரதட்சிணம் செய்து துறவி மானசசரோவரம் செல்லும் வழியை அணுகினர். இரவு நேரங்களில் கயிலாயகிரி அமைப்பிலுள்ள குகை போன்ற பகுதிகளில் அவர் தங்குவார். மூட்டையிலுள்ள சத்துமாவை உட்கொள்ளுவார். சூரப்புலிக்கு ரொட்டி கொடுப்பார். இவ்வாறு அவர் நான்காம் நாள் மாலையில் மானசசரோவரம் வழியை அடைந்தார். மானசசரோவரம் என்பது ஒரு பெரிய தடாகம்; சுற்றளவிலே சுமார் 62 மைல் உள்ளதென்ருல் அது எவ்வளவு பெரியதென்று ஊகித்துக்கொள்ளலாம். அது கடல் மட்டத்திற்கு மேலே 15,000 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. ஆண்டிலே பல மாதங்கள் அது உறைந்து கிடக்கும். பனி உருகும் வேனிற்காலத்தில் மரகத மணி போன்று அது மிக அழகாகத் தோன்றும். வட திசையிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/117&oldid=840563" இலிருந்து மீள்விக்கப்பட்டது