பக்கம்:சூரப்புலி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 அழுதுகொண்டிருந்தன. பெரிய கட்டடங்களெல்லாம் பூட்டப்பட் டிருந்தன. லட்சக்கணக்கில் வாணிகம் நடக்கும் இடங்கள் அவை. அவற்றிலே மழைக்காக ஒண்டக்கூட இடம் கிடையாது. மனிதனுக்கு ஏற்படக்கூடிய துன்பத்தின் எல்லேயைச் சூரப்புலி சென்னையில் கண்டது. பகட்டும் பணமும் கொழிக்கின்ற இடத்திலே மனிதன் சேற்றில் வாழும் பன்றியைப் போலவும், புழுவைப் போலவும் வாழ்வதை அது கண்டது. இந்த நகரத்திற்கு எதற்காகத் துறவி வந்தார் என்று அது ஆச்சரியமடைந்தது. கானகத்தின் இன்பத்தை விட்டு அவர் இந்தத் துன்பம் நிறைந்த இடத்திற்கு வந்ததை அதனல் புரிந்து கொள்ள முடியவில்லே, சூரப்புலி மேற்கொண்டு அந்த வீதியில் நடவாமல் திரும்பி மடத்தை அடைந்தது. துறவி ஒரிடத்திலே அமர்ந்து தியானத்திலே தம்மை மறந்திருந்தார். இங்குகூட இவ்வாறு துறவி தம்மை மறந்த நிலேயில் இருப்பதைக் கண்டு சூரப்புலி ஆச்சரியமடைந்தது. அன்று மாலேயிலே சூரப்புலிக்கு மற்றுமோர் அனுபவம் எற்பட்டது. பட்டணத்து உயர் நீதிமன்றத்துக்கு முன்னல் கடைவீதி வழியாகத் துறவி நடந்துகொண்டிருந்தார். திரளாகச் செல்லும் மக்கக் யும் ஓயாது செல்லும் கார் வரிசைகளையும் பார்த்துக்கொண்டே சூரப்புலி அவருக்குப் பக்கத்தில் சென்றுகொண்டிருந்தது. மடத்திலே பயிற்சி பெற்றுவரும் பிரம்மச்சாரிகள் இரண்டுபேர் துறவிக் காகக் கம்பளிகளும், கம்பளித் துணிகளும், வேறு சாமான் களும் வாங்குவதிலே ஈடுபட்டிருந்தார்கள்.சாமான்கள் வாங்குவதிலே ஒரு சிறிதும் அக்கறை இல்லாதவர்போல, துறவி சாலேயோரத்திலே மெதுவாக நடந்துகொண்டிருந்தார். கூட்டம் நெருக்கமாக இருந்தது. பலவகையான சில்லறைச் சாமான்கள் விற்பவர்களும், வாங்கு வோர்களும் நடைபாதையிலே குழுமியிருந்தார்கள். துறவி அவர்க ளிடையே புகுந்து குழந்தையைப் போல வேடிக்கை பார்த்துக் கொண்டு சென்ருர். அந்தச் சமயத்திலே அவருடைய மேலங்கியின் அள்ளைப்புறத்திலேயிருந்த ஜேபியில் கைவிட்டு மிகச் சாமர்த்திய மாக அதற்குள்ளிருந்த பணப்பையை ஒருவன் எடுத்துவிட்டான். மிகத் திறமையோடு செய்த இந்த ஜேப்படித் திருட்டைத் துறவி கண்டுகொள்ளவேயில்லே. ஆனல் சூரப்புலி பார்த்துவிட்டது. பணப்பையோடு கூடிய கையை பைக்கென்று பிடித்துக்கொண்டது. ஜேப்படித் திருடன் தப்பியோட முயன்ருன். சூரப்புலி அதற்கு இடம் கொடுக்கவில்லை. அவன் ஓட முயன்றதால் கையை அழுத்தமாகக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/79&oldid=840645" இலிருந்து மீள்விக்கப்பட்டது