உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சூளுரை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்றும் அழியா நிலை இன்றைய தினம் புதுக் கோட்டை மாவட்டத் தினுடைய முதல் மாநாட்டை அறந்தாங்கியிலே மிகச் சீரோடும் சிறப்போடும் நடத்தி நம்முடைய கழகக் காவலர்கள் நேற்றும் இன்றும் பல்வேறு கருத்துக்களை இந்த மாநாட்டிலே எடுத்துரைத்த. மாநாடு நிறைவு பெறும் கட்டத்தில் உங்களிடையே இருக்கின்ற அரிய வாய்ப்பை நான் பெற்று இருக்கிறேன். அறந்தாங்கி, அழகு தாங்கி, ஆர்வம் தாங்கி, அறிஞர் அண்ணாவினுடைய கொள்கைகளைத் தாங்கி என்றென்றும் வீறுநடைபோடும் என்பதற்கு எடுத்துக் காட்டாக விளங்கு. வது கண்டு நாங்களெல்லாம் பெருமகிழ்ச்சியடைகிறோம். புதுக்கோட்டை மாவட்டத்தினுடைய மாநாட்டை எங்கே நடத்துவது என்கின்ற கேள்வி எழுந்தபோது, அறந் தாங்கியிலே நடத்தலாம் என்ற கருத்தை நானும், நாவலரும், பேராசிரியரும் எடுத்துச் சொன்னோம். புதுக்கோட்டையில் உள்ள நண்பர்கள் எல்லாம் புதுக்கோட்டைதான் இந்த மாவட்டத்தினுடைய தலைநகரம். ஆகவே அங்கேதான் இந்த மாநாட்டை நடத்தவேண்டுமென்று வற்புறுத்தி' னார்கள். புதுக்கோட்டை உருவான நேரத்தில் ஒரு விழாவும், அதற்கு முன்பு அங்கே ஒரு பொதுக்குழு நிகழ்ச்சியும் அதற்குப் பிறகு அந்த மாவட்டத்தினுடைய செயல்வீரர் கூட்டமும் இப்படி மூன்று பெரிய நிகழ்ச்சிகள் அந்த நகரத்தில் நடைபெற்றதன் காரணத்தால் கொஞ்சம் கிராமத்திற்குப் பக்கமும் கருணை காட்டுங்கள் என்று கேட்டுக்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூளுரை.pdf/100&oldid=1695877" இலிருந்து மீள்விக்கப்பட்டது