உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சூளுரை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 - காப்பாற்றுகின்ற பணியை அறந்தாங்கியில் தி. மு. கழகம் இன்றைக்குச் செய்து கொண்டிருக்கிறது. எங்கே குட்டை குழம்புகிறது என்ற கவலை நமக்கு இல்லை. எந்தக் குளத்தில் எந்த மீன் கிடைக்கும் என்ற அக்கறையில்லை. அந்த மீனை இன்னொரு குளத்திலே விடலாமா, அல்லது பானையிலே போட்டு சட்டியிலே போட்டு, வேகவைத்துச் சாப்பிடலாமா என்கின்ற அந்தக் கவலையும் நமக்குக் கிடையாது. தி.மு. கழகம் தமிழ்ச் சமுதாயத்தின் விடிவிளக்கு, தமிழ்ச்சமுதாயத்தினுடைய வழிகாட்டி, தமிழ்ச் சமுதாயத் தினுடைய பாதுகாவலன், தமிழ்ச் சமுதாயத்தினுடைய அரண். இந்தக் கழகத்தைக் கட்டிக் காப்பாற்ற மேலும் வலுவூட்ட கழகப் பணிகளைத் தொடர, நம்முடைய பயணத்தை மேற்கொள்ள சபதம் ஏற்கத்தான் இங்கே அறந்தாங்கியில் தி. மு. க. கழக மாநாட்டில் நாம் கூடி யிருக்கிறோம். இந்தக் கட்சி ஏதோ நேற்றுப் பெய்த மழையில் இன்று காலையில் உற்பத்தியாகிவிட்ட காளான் அல்ல. இந்தக் கட்சிக்கு நீண்டதோர் நெடிய பாரம்பரியம் உண்டு. நேற்றைக்குப் பெரியார் படத்தையும் பேரறிஞர் அண்ணா படத்தையும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் படத்தையும் திறந்து வைத்தோம். நீண்ட காலமாகத் தமிழ்ச் சமுதாய மக்களுக்காக, தாழ்த்தப்பட்ட பெருங்குடி மக்களுக்காக, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக, ஒரு வகுப்பாரின் ஆக்கத்தி லிருந்து அவர்களைக் காப்பாற்ற-மேட்டுக்குடி மக்களுடைய பிடியிலிருந்து அவர்களை விடுவிக்க, ஆதிக்கமற்ற சமுதா யத்தை அமைக்க ஒரு பெரும் புரட்சி, தமிழகத்திலே உருவாகி 40, 50 ஆண்டு காலத்துக்கு மேலாகிறது. அந்தப் புரட்சி அத்தியாயத்தின் அரசியல் சந்ததிதான் நாம். அதனுடைய வழித்தோன்றல்கள்தான் நாங்கள். ஆகவேதான் இந்தக் கழகத்தைக் கட்டிக் காக்கும் பெரும் பொறுப்பை பேரறிஞர் அண்ணா அவர்களுடைய மறைவுக்குப் பிறகு, ஒற்றுமையாக ஒற்றுமையாக இருந்து கட்டுப்பாட்டோடு அனைவரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூளுரை.pdf/110&oldid=1695887" இலிருந்து மீள்விக்கப்பட்டது