உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சூளுரை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111 செயலாளரை-பொருளாளரைத் தேர்ந்தெடுக்கிறோம். இது எங்களுக்குள்ள முறை. அவர்களுடைய கட்சியில் எப்படி தெரியுமா? அவைத்தலைவரை-துணை அவைத் தலைவரை இன்னும் யார் யாரையோ பொதுக்குழு தேர்ந்தெடுக்கும். ஆனால் பொதுச் செயலாளரை மாத்திரம் அவர்களுடைய கட்சியில் இருக்கிற பதினேழு லட்சம் உறுப்பினர்களும் தேர்ந்தெடுப்பார்களாம். எப்படி? ஊருக்கு ஊர் பெட்டி வைக்கப்படும்? போட்டியிடுபவர்களின் பெயர்கள், எழுதப் படும், பதினேழு லட்சம் உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள்? ஓட்டுக்கள் எண்ணப்படும்? யார் எண்ணுவார்கள்? என்ப தெல்லாம் வேறு விவகாரம். அவர்களுடைய சட்ட திட்டத்தில் 'நான் நுழைய விரும்பவில்லை. அது தேவையும் இல்லை. ஆனால் ஒன்றை எண்ணிப் பார்க்க வேண்டும். பொருளாளரோ அல்லது அவைத் தலைவரோ, துணை அவைத் தலைவரோ தவறு செய்தால், பொதுக்குழு கூடி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து அவர்களை விலக்கலாம். எம்.ஜி.ஆர். தானே பொதுச் செயலாளராக காலாகாலத்துக்கும் இருக்கலாம் என்று எண்ணிக்கொண்டு பதினேழு லட்சம் பேரால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை யார் கொண்டு வருவது? எப்படி அவர் தவறு செய்தால், நீக்குவது? ஆக நம்மைச் சர்வாதிகாரி என்றவர் இன்றைக்கு தன்னை சர்வாதிகாரியாக ஆக்கிக்கொள்ள, தி.மு.க -வை அழிக்க, மக்களிடத்தில் தவறான பிரச்சாரங்களை செய்து கொண்டிருக்கிற காட்சியை நாம் காண்கிறோம். நாம் ஒரு நீண்டகால பயணத்தை நடத்திக்கொண்டிருக் கிறோம். தி.மு.க -வை காட்டிக் கொடுப்பதாக நினைத்துக் கொண்டு அவர்கள் தவறானஅரசியல் செய்துகொண்டிருக்கிற காட்சியை நாம் கண்டு களித்துக் கொண்டிருக்கிறோம். என்னதான் சட்டதிட்டங்கள் வகுத்தாலும் என்னதான் கொள்கைகள் வகுத்தாலும் அண்ணாவின் படத்தை அவர் களுடைய கொடியில் போட்டாலும் அது அமைப்பில்லாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூளுரை.pdf/115&oldid=1695892" இலிருந்து மீள்விக்கப்பட்டது