உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சூளுரை.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 இந்த மனைகளைப் பெறுவதற்கு அதன் விலையை உழவர்கள் செலுத்தியாக வேண்டும். 1971-ஆம் ஆண்டில், தமிழ்நாடு குடியிருப்பு அனுபோக தாரர்கள் சட்டத்தைச் செய்தோம்; 1975-இல் அல்ல - இரு பது அம்சத் திட்டம் வானொலியில் அறிவிக்கப்பட்ட பிறகு அல்ல-1971-லேயே செய்தோம்! இந்தச் சட்டத்தின் கீழ் குடியிருப்பு மனை பெற்றவர்கள் 1,75,000 பேர்கள்; இவர்களில் தாழ்த்தப்பட்ட பெருங்குடி மக்கள் 1,02,404 பேர்கள்: பிற்படுத்தப்பட்டவர்கள் 40,550 பேர்கள்; இதர வகுப்பினர் 32,123 பேர்கள்; இதற்காக அரசுக்கு ஆன செலவு கிட்டதட்ட 21 இலட்சம் ரூபாயாகும்! அரசுக்குச் சொந்தமான நிலத்திலிருந்து வீட்டு மனை ஒப்படை செய்யும் திட்டத்தின் கீழ்-1967-க்கு முன்பு இருபதாண்டுக் காலத்தில்-அப்போதிருந்த ஆட்சியில் - வீட்டு மனை ஒப்படை செய்தது-பட்டா கொடுத்தது 63,770 பேர்களுக்காகும். இந்த எட்டாண்டுக் காலத்தில் பட்டா கொடுத்திருப்பது 5,03,697 பேர்களுக்காகும்! அரிசன மக்களுக்கு மட்டும் நிலத்தை ஆர்ஜிதம் செய்து கொடுத்த வகையில் இதுவரையில் 2,36,000 அரிசன குடும் பங்கள் பயன் பெற்றிருக்கின்றன; இதற்கான செலவு நான்கு கோடியே இருபத்தைந்து இலட்சமாகும்! கழக அரசு கட்டித் தந்த குடியிருப்புகள் இதைத் தவிர, தலைமையமைச்சர் குறிப்பிடாத அம்சமாக 30,000 அரிசனங்களுக்கு டிசம்பர் இறுதிக்குள் நல்ல கெட்டியான வீடுகள்-ஒரு வீடு நான்காயிரம் ரூபாய் பெறுமானமுள்ள அளவிற்குக் கட்டித் தர திட்டமிட்டு, அது முடிவடையவிருக்கிறது; இதற்கான செலவு மூன்றரை கோடி ரூபாயாகும். பதின் அதைப் போலவே, மீனவர்களுக்கு ஐந்தாயிரம் வீடுகள் முதற்கட்டமாகக் கட்டித் தர இரண்டு கோடி ரூபாய் ஒதுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூளுரை.pdf/144&oldid=1695921" இலிருந்து மீள்விக்கப்பட்டது