உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சூளுரை.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 செலவழித்தால்தான் இயலும்; இந்தத் திட்டம் 1979- 80-இல் முடிவடையும். - இந்தியா முழுமைக்கும் ரூ. 250 கோடி என்று பெருந் தொகையை அறிவித்திருக்கிறார்களே இதிலிருந்து, பல முறை நாம் கேட்ட பிறகு ஒரு கோடி ரூபாய்தான் 20 அம்சத் திட்ட அறிவிப்பிற்குப் பிறகு - ஒதுக்கியிருக் கிறார்கள்! - இதைத்தான் நண்பர் சுப்பு பேசும்போது, 'ஏட்டளவில் வெகு அழகாக எழுதிக் காட்டிவிடுகிறீர்கள் - நிறைவேற்றப் பணம் எங்கே?' என்று கேட்டார். - இருபத்தோறாவது அம்சம் ஒன்று வேண்டாமா? இருபது அம்சத் திட்டத்தைச் சொல்லிவிட்டு, 21-ஆவது அம்சமாக இவ்வளவு கோடி ரூபாய் இன்னின்னவைகளுக்குச் செல வழிக்க ஒதுக்கியிருக்கிறோம்' என்று சொல்லியிருக்க வேண்டாமா? இந்தியா முழுமைக்கும் ரூ.250 கோடி; அதில், தமிழ் நாட்டில் மின் உற்பத்தியைப் பெருக்க ஒரே ஒரு கோடி ரூபாய்தான்! நெய்வேலி எத்தனை ஆண்டுக்காலமாகத் தவம்* கிடக்கிறது? பக்தவத்சலம், காமராசர் ஆகியோர் ஆண்ட காலத்திலேயே தொடங்கப்பட்டது-இரண்டாவது சுரங்கம் வெட்டப்பட வேண்டும்' என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது; அப்போது தொடங்கியிருந்தாலே இப்போதுதான் முடிந் திருக்கும்; அப்படி ஏழெட்டாண்டுகள் ஆகும்; ஆனால், இன்னும் தொடங்கவே இல்லை; நாளைக்குத் தொடங்கினால் கூட இன்னும் ஏழெட்டு ஆண்டுக்காலம் ஆகும்! இதற்கிடையில், 'ஆந்திரத்திலுள்ள ‘இராம குண்டா'த் திட்டத்தை ஏற்றுக்கொள்ளலாமா' என்கின்ற பயங்கரப் பிரச்னை எழுந்தது; இந்தச் செய்தி பற்றிக் கேள்விப்பட்டதும் நான் பிரதமருக்கு எழுதியிருக்கிறோன் - ' நீங்கள், நெய் வேலியைக் கைவிட்டுவிட்டு, ஆந்திரத்தில் 'இராம குண்டா'த் .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூளுரை.pdf/153&oldid=1695930" இலிருந்து மீள்விக்கப்பட்டது