உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சூளுரை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 நாட்டு மக்கள் உள்ளத்தின் எதிரொலி பத்திரிகை - அது எந்தக் கட்சிப் பத்திரிகையாக இருந்தாலும் சரிதான்! இன்று காலையில் கூட ஓர் எதிர்க் கட்சிப் பத்திரிகையில், 'ஒரு பாலம் கட்டப்படவே இல்லை' என்கின்ற செய்தி வந்தது; அதைப் பார்த்து விட்டு நான், பொதுப் பணித் துறை அமைச்சருடன் கலந்து பேசி, உடனடியாக நடவடிக்கை எடுங்கள்' என்று சொன்னேன். அது, எதிர்க் கட்சிப் பத்திரிகையாக இருந்தாலும், சுட்டிக் காட்ட வேண்டியவற்றைச் சுட்டிக் காட்டுகின்ற உரிமையை - தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில்-பெற் றிருப்பதால்தான், அது என்னுடைய கவனத்திற்கு வர முடிந்தது; இல்லையென்றால், நாட்டில் நடைபெறுகின்ற பல சம்பவங்கள் தெரியாமல் மூடி மறைக்கப்பட்டுவிடும்; மாறாக, வதந்திகள் பரவும்; வதந்திகள் பரவினால், அது, சென்சார் செய்யப்படுகின்ற செய்திகளைவிடப் பயங்கரமான விளைவு களைத் தந்துவிடும்! பிறகு, உண்மையான செய்திகளைக்கூட மக்கள் நம்ப மறுப்பார்கள்! வாந்தி வேடிக்கையாகச் சொல்வார்கள் - ஒருவன் எடுத்தான்; பக்கத்தில் இருந்தவன் - அடுத்த தெருக்கார னிடம், 'அவன் வாந்தி எடுத்தான்' என்று சொன்னான்; உடனே அவன் இன்னொரு தெருக்காரனிடம், 'அவன் கறுப் பாக வாந்தி எடுத்தான்' என்றான்; அதைக் கேட்ட அவன்- கொஞ்சம் கற்பனை கலந்து-வேறொரு தெருக்காரனிடம், 'அவன் காக்கைபோல் வாந்தி எடுத்தான்' என்றான்; இப்படிப் பரவி - கடைசியில் இன்னொருவன், ‘அவன் காக்கை, காக்கையாக வாந்தி எடுத்தான்' என்று மற்றவ னிடம் சொன்னான்! அதைப்போல வதந்தி பரவத் தொடங்கிவிடுமானால். கால்கள் முளைத்து - இறக்கைகள் முளைத்துப் பறக்க ஆரம்பித் தால், உண்மையான செய்திகளும்கூடச் சாதாரணமாகி விடும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூளுரை.pdf/16&oldid=1695793" இலிருந்து மீள்விக்கப்பட்டது