உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சூளுரை.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

205 சித்துத்தான் ஜனநாயக ரீதியில் இயங்குகிற இயக்கம் முடிவுகளை மேற்கொள்ளும். அந்த வகையில்தான் பெரியார் அவர்கள் ஸ்மித்தை சந்தித்த நேரத்தில், திராவிட நாட்டை அதிகமாக வலியுறுத்தியிருப்பாரேயானால் அல்லது பேரறிஞர் அண்ணா அவர்கள் வலியுறுத்தவேண்டு மென்று மிகப் பிடி வாதமாக இல்லாமல் இருந்திருப்பாரேயானால்-அதற்குரிய காரணம் வெள்ளைக்காரன் இந்தியாவுக்கு விடுதலை வழங்க நீங்கள் துண்டு துண்டாகப் போய் விடுவீர்கள் உங்களிடத் தில் ஒற்றுமை இல்லை, பிரிவினை எண்ணம் இருக்கிறது. அந்தப் பக்கத்தில் பாக்கிஸ்தான் இன்னொரு பக்கத்தில் திராவிட ஸ்தான் என்ற இந்தக் காரணங்களைக் காட்டி எங்கே இந்தி யாவுக்கு விடுதலை வழங்காமல் அவன் சமாளித்து விடுவானோ அல்லது சால்சாப்புச் சொல்வானோ என்ற அந்த கருத்தும் இருந்த காரணத்தால்தான் முதலில் இந்திய நாட்டுக்கு விடுதலை; பிறகு நமது கருத்தை எடுத்துரைப்போம் என்ற வகையில் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவில்லையே தவிர நாம் முதன் முதலில் வைத்த கோரிக்கையே இந்திய நாட்டின் விடுதலை. அதை யாரும் மறப்பதற்கில்லை. விடுதலை பெற்ற பிறகு t2 ஆம் ஆண்டு திராவிட நாடு கொள்கையை கைவிட வேண்டுமென்ற அந்த வாய்பபை நழுவவிடலாமா என்று கேட்டால் அதற்கு நான் சொல்கிற விளக்கம் 62 -லே திராவிட நாடு கொள்கையைக் கைவிட வேண்டிய காரணம் சீன ஆக்கிரமிப்பு பாகிஸ்தான் எதிர்ப்பு இப்படிப்பட்ட வெளிநாட்டுக்காரர்களின் சீற்றம், வெளி நாட்டுப் பகை, வெளிநாட்டு ஆக்கிரமிப்பு இவைகளிலிருந்து இந்தியாவை பாதுகாக்க நாம் பிரிவினை கொள்கையைக் கைவிட்டாக வேண்டும். பிரிவினைக் கொள்கையை கைவிட்டு விடுகிறோம். ஆனால் பிரிவினை கேட்பதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன என்று சொல்லி பிரிவினைக் கொள்கையை கைவிட்டோம். 69ல் ஜனாதிபதி தேர்தலில் நாம் எந்த அவசரத்தின் அடிப்படையிலும் முடிவுகளை எடுக்கவில்லை. முற்போக்கான சில கொள்கைகளை நிறை வேற்ற நமது பிரதமர் இந்திராகாந்தியார் தயாராக இருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூளுரை.pdf/209&oldid=1695986" இலிருந்து மீள்விக்கப்பட்டது