உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சூளுரை.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

211 ஏன் அதற்குள்ளேயே இந்திய கம்யூனிஸ்ட்டுகள் என்கிற ராஜா தேள் இருந்து இந்தியாவின் சுதந்திரத்தை ஜனநாயக உரிமையை பறிப்பதற்குச் செய்கிற சூழ்ச்சியை கவனிக்காமல் இருக்கிறீர்களே. உங்களுக்கு பிள்ளை இல்லை பாசம் இல்லை என்று சொல்லமாட்டேன். அவசரத்தில் பிள்ளை அழுகிறான் என்று நீங்கள் கவனிக்க மறந்துவிடுகிறீர்கள். ஜெயப்பிரகாஷின் கண்ணீருக்குக் காரணம் என்ன மொரார்ஜி தேசாயின் வேதனைக்குக் காரணம் என்ன? அசோக்மேத்தாவின். அழுகைக்குக் காரணம் என்ன? காமராஜர் வடித்த கண்ணீர் வெள்ளத்திற்குக் காரணம் என்ன? இன்றைக்கு இந்தியா பெரும் சமுதாயம் அழுது கொண்டிருக்கிறதே அதற்கு என்ன காரணம்? ராஜா தேள் கொட்டிவிட்டதம்மா. ராஜா தேள் கொட்டிவிட்டதம்மா. அந்தத் தேள் பையனுடைய உயிரைப் பறித்தது. இந்தத் தேள் இந்தியாவிலிருக்கிற ஏறத்தாழ 55 கோடி மக்களுடைய உரிமையைப் பறித்துக் கொண்டிருக்கிறது. இதைத்தான் இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் உணர்ந்திட வேண்டும். இப்படித்தான் எங்களுடைய கருத்துக்களை அம்மையார் அவர்களுக்கு எடுத்துச் சொல்கிறோமேயல்லாமல் தனிப்பட்ட முறையில் தகாத வார்த்தை பேசி தரக்குறை வான வாசகங்கள் எழுதி நாங்கள் அவர்களைத் தாக்கிட முற்படவில்லை. இங்கே பேசிய தாய்க்குலத்து, மகளிர் பிரதிநிதிகள் எல்லாம் இந்தியாவில் எங்கே ஜனநாயகம் இருக்கிறது என்று சொன்னார்கள். நாங்கள் சொன்னால் நீங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தினர், உங்கள் ஆட்சியைப் பற்றி நீங்கள் சொல்வீர்கள், பெருமைப் படுத்திக் கொள்வீர்கள், இது என்ன பெரிய காரியம் என்று சொல்லத் தோன்றும் சில பேருக்கு. ஆனால் கடந்த 2 கிழமைகளுக்கு முன்பு காமன் வெல்த் பாராளுமன்ற குழுவினர் இந்தியாவுக்கு வந்தார்கள். டெல்லியில் ஒரு பெரிய கருத்தரங்கத்தில் கலந்து கொண் டார்கள். அந்தக் கருத்தரங்கத்தில் இந்திய ஜனாதிபதி உரை யாற்றினார். இந்தியாவினுடைய பிரதமர் இந்திரா காந்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூளுரை.pdf/215&oldid=1695992" இலிருந்து மீள்விக்கப்பட்டது